1 மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட அதுல்யா… ரசிகர்கள் கொண்டாட்டம்!

2017 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் கண்கட்டுதே’ என்ற படத்தில் அறிமுகமாகி பல இளைஞர்களின் இதயத்தை பதம் பார்த்தவர் தான் ‘அதுல்யா ரவி’.

தனது கண் சிமிட்டல்களால் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர். தொடர்ந்து பல படங்கள் வாய்ப்புகள் தேடி வந்தாலும், கதையின் முக்கியத்துவத்தை அறிந்து தனக்கான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தொடர்ந்து ஏமாலி, நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்த அவர், தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.

நாடோடிகள் 2, சுட்டுப் பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, அமலா பால் தயாரிப்பில் ஒரு படம்,  எஸ் ஏ சி இயக்கும் படம், என தொடர்ச்சியாக முன்னனி நாயகர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் ரசிகர்களை எட்டிப் பிடித்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான சந்தோஷத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.