100 குண்டுகளுடன் பாக். எல்லைக்குள் சென்று எதிரிகளை அழிப்பேன்: நடிகை ஆவேசம்

லூதியானா: நாட்டிற்காக உயிரைக் கொடுக்கத் தயார் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானியர்களிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பியுள்ளார். அவரை வரவேற்று திரையுலக பிரபலங்களும், மக்களும் ட்வீட் போட்டுள்ளனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் ஆவேசமாக பேசியுள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கை மிகச் சரி. மோடி சரியானவற்றையே செய்துள்ளார். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும் என்கிறார் ராக்கி.

நாட்டிற்காக நான் என் உயிரையும் கொடுப்பேன். தேவைப்பட்டால் நான் 50-100 வெடிகுண்டுகளுடன் எதிரியின் எல்லைக்குள் சென்று அவர்களை அழிப்பேன் என்று ராக்கி சாவந்த் ஆவேசமாக பேசியுள்ளார்.

அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார் ராக்கி. அபிநந்தன் நாடு திரும்பியதை பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் இந்த நேரத்திலும் கூட ராக்கி சாவந்த் விளம்பரம் தேட எதையாவது பேசுவதா என்று நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.