தண்ணி வண்டி திரை விமர்சனம் ரேட்டிங் –2.25 /5

நடிகர் நடிகைகள் – உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி, தம்பி ரமையா, பால சரவணன், விதுலேகா,  தேவதர்ஷினி, வினுதா லால், ஜார்ஜ்,  மதுரை முத்து. மற்றும் பலர்.

இயக்கம் – மனிகா வித்யா.

ஒளிப்பதிவு – எஸ்.என்.வெங்கட்.

படத்தொகுப்பு – எ.ஏல். ரமேஷ்.

இசை – மோசஸ்

தயாரிப்பு – ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ்.

ரேட்டிங் –2.25 /5

தண்ணி வண்டி ‘ என்றால் என்ன தோன்றும் அதற்கு இரண்டு பொருள் உண்டு.

நேரடியான பொருள் குடிநீரை விநியோகிக்கும் வண்டி என்பது.

இன்னொரு பொருள் ஊருக்கே தெரிந்த விஷயம் குடிகாரன் என்று.

ஆனால் தண்ணி வண்டி என்றதும் நமக்கு இந்த இரண்டாவது குடிகாரன் என்று பொருள் தான் நினைவுக்கு வந்து போகும்.

கதாநாயகன் உமாபதி ராமையா மதுரைப்பகுதியில் தண்ணீர் சப்ளை செய்யும் வேலையைச் செய்து வருகிறார்.

கதாநாயகி சம்ஸ்கிருதி சந்திக்கும் கதாநாயகன் உமாபதி ராமையா லாண்டரி கடை நடத்தும் கதாநாயகி சம்ஸ்கிருதி மீது காதல் பிறக்கிறது.

இந்நிலையில் மதுரை பகுதியின் புதிய வருவாய் துறை கோட்ட அலுவலராக ஆர்.டி.ஓ பொறுப்பேற்கிறாள் ஒரு பெண் அதிகாரி வினுதா லால்.

மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பவர்களை அழைத்து எச்சரிக்கிறார்.

எல்லோரிடமும் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறார்.

இவள் கடமையில் கறார் காட்டும் கண்டிப்பான அதிகாரி.

ஆனால் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் நேர்மையில்லாதவள்.

குறிப்பாக செக்ஸ் விஷயத்தில் கண்மூடித்தனமான பேராசை கொண்டவள்.

ஆனால் அந்த அதிகாரி செக்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரிகிறது.

பல ஆண்களுடன் ரகசியமாக தொடர்பு வைத்திருப்பவள்

ஒரு கொலை தொடர்பான வீடியோவை தனக்கே தெரியாமல் கதாநாயகி சம்ஸ்கிருதியை வெளியிட, அவரையும் காதலன் உமாபதியையும் பழிவாங்க நினைக்கிறார் அந்த பெண் அதிகாரி.

கதாநாயகி சம்ஸ்கிருதியை காப்பாற்ற முயற்சி செய்கிறான் நாயகன் உமாபதி ராமையா.

இறுதியில் பெண் அதிகாரி கதாநாயகன் உமாபதி மற்றும் கதாநாயகி சம்ஸ்கிருதியை பெண் அதிகாரி பழிவாங்கினாரா? இல்லையா? என்பதுதான் இந்த தண்ணி வண்டி திரைப்படத்தின் மீதிக்கதை.

தண்ணி வண்டி திரைப்படத்தில் கதாநாயகனாக உமாபதி ராமையா நடித்திருக்கிறார்.

நிஜத்தில் தம்பி ராமையாவின் மகனான கதாநாயகன் உமாபதி ராமையா திரைப்படத்திலும் அவரது மகனாகவே வருகிறார்.

நல்ல உயரம், இயல்பாக நடிப்பது என்று கதாநாயகனுக்கான எல்லாம் இருந்தும் அவருக்கு நல்ல கதை கிடைக்காதது சிக்கல்தான்.

பாலசரவணனுடன் சேர்ந்து கதாநாயன் உமாபதி ராமையா காட்டும் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

சண்டை காட்சிகளிலும், நடன காட்சிகளிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கதாநாயகன் உமாபதி ராமையா.

கதாநாயகி தாமினியாக ’வில் அம்பு’ புகழ் சம்ஸ்கிருதி நடித்துள்ளார்.

இளமை ததும்பும் அழகாலும், துள்ளல் நடிப்பாலும் ரசிகர்களைக் கவருகிறார்.

சம்ஸ்கிருதி பொம்மையாக வந்து உமாபதியைக் காதலிக்கிறார்.

படத்தில் அவருக்கு அதிக வாய்ப்பில்லை.

திருப்பங்களை ஏற்படுத்தும் பெண் அதிகாரியாக வரும் வினுதா லால் அதிரடியான நடிப்பால் அமர்க்கள படுத்தியிருக்கிறார்.

பெண் அதிகாரியான வரும் வினிதாலால்தான் திரைபபடம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறார்.

இன்னொரு நீலாம்பரியாக விரைப்பு காட்டுகிறார்.

கதாநாயகன் உமாபதி ராமையாவின் நண்பனாக வரும் பாலசரவணன், கதாநாயகனின் அப்பாவாக வரும் தம்பி ராமையா, தம்பி ராமையாவின் இரண்டாவது மனைவியாக வரும் தேவதர்ஷினி மற்றும் வித்யூலேகா மதுரை முத்து உள்ளிட்டோர் காமெடி பண்ணி ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள்.

இயக்குனர் மறைந்த ராசு மதுரவன், மனோஜ்குமார், தருண் கோபி ஆகிய இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த தண்ணி வண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.

திரைக்கதையில் எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் இருப்பதால் திரைப்படத்தின் பல காட்சிகள் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் செல்கிறது.

திரைப்படத்தை எடுத்த விதத்திலும் இயக்குநர் மாணிக்க வித்யா இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

வழக்கமான கமர்ஷியல் மசாலாக்கதையை கையிலெடுத்ததால், தனித்துவம் இல்லாத சராசரி இயக்குனராக அவர் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டுள்ளார்.

இசையமைப்பாளர் மோசஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். எஸ்.என்.வெங்கட்டின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ‘தண்ணி வண்டி’ திரைப்படம் தள்ளாட்டம் அதிகம்.