இன் கார் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 1.5./5.

நடிகர் நடிகைகள் :- ரித்திகா சிங், சந்தீப் கோயத், மனிஷ் ஜான் ஜோலியா, ஞான பிரகாஷ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஹர்ஷ் வர்தன்.

ஒளிப்பதிவு :- மிதுன் கங்கோபாத்யாய்.

படத்தொகுப்பு :- மாணிக் திவார்.

இசை :- மத்தியாஸ் டுப்ளெஸ்ஸி.

தயாரிப்பு நிறுவனம் :- இன்பாக்ஸ் பிச்சர்ஸ்.

தயாரிப்பாளர்:- அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி.

ரேட்டிங் :- 1.5 / 5.

ஒரு நாளைக்கு இந்தியாவில் சுமார் 100 பெண்கள் கடத்தப்படுகின்றனர் என்ற புள்ளி விவரத்தை கூறுகிறார் இயக்குநர் ஹர்ஷ் வர்தன்.

அதில் பல பொரும்புள்ளிக்ள் பெண்கள் கடத்தல்களில் சம்பந்தப்பட்டிருப்பதால் பல கடத்தல் விஷயங்கள் வெளியில் வருவதே இல்லை.

மூன்று பேர் கொண்ட கடத்தல் கும்பல் வந்த ஜீப்பில் நடுவழியில் ரிப்பேராக கார் ஒன்றை மிரட்டி அதில் ஏறி கொள்கிறார்கள்.

சில தூரம் பயணித்த அந்த கடத்தல் கும்பலில் ஒருவன் இப்போது நம்முடன் ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்கும் என கூறுகிறான்..

கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் கதாநாயகி ரித்திகா சிங்கை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி விடுகின்றனர்.

சில கிலோமீட்டர் பயணித்து ஒரு ரகசியமான ஒரு பாழடைந்த இடத்தில் அவளை கற்பழிக்க அந்த கடத்தல் கும்பல் உள்ள மூவரும் திட்டமிடுகின்றனர்.

கையில் கத்தி மற்றும் துப்பாக்கி வைத்திருப்பதால் அந்த கார் டிரைவரும் கதாநாயகி ரித்திகா சிங்கும் இந்த கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

அந்த கடத்தல் கும்பலிடம் இருந்து டிரைவரும் கதாநாயகி ரித்திகா சிங்கும் தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? அந்த கடத்தல் கும்பலை சேர்ந்த மூன்று பேர் என்ன ஆனார்கள் என்பதுதான் இநத இன் கார் திரைப்படத்தின் மீதி கதை.

இந்த இன் கார் திரைப்படத்தில் ரித்திகா சிங் நடித்திருக்கிறார்.

சாக்‌ஷி குலாட்டி கதாபாத்திரத்தில் ரித்திகா சிங் நடித்துள்ளார்.

கடத்தல் கும்பலுக்கு நடுவில் அமர்ந்திருக்கும் புலியிடம் சிக்கிய புல்லி மாணின் வலியை அழகாக நடிப்பில் கொண்டு வந்துள்ளார்.

கதாநாயகி ரித்திகா சிங்கின் நடிப்பு பல இடங்களில் பாராட்டு கூறிய வகையில் இருந்தாலும் இப்படிப்பட்ட கதையில் ஏன் நடித்தார் என்பது மிக பெரிய கேள்விக்குறியாகதான் இருக்கிறது.

கடத்தல் கும்பலை சேர்ந்த சந்தீப் கோயத், மனிஷ் ஜான் ஜோலியா, மூவரும் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

கார் டிரைவராக நடித்திருக்கும் ஞான பிரகாஷ், பயம் கலந்த நடிப்பு மிக அருமையாக கொடுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் மத்தியாஸ் டுப்ளெஸ்ஸி இசை மற்றும் பாடல் பிண்ணனி இசை திரைப்படத்திற்கு பலம்.

இந்த இன் கார் திரைப்படத்திற்கு ஆறுதல் திரைப்படத்தின் ஒளிப்பதிவு மட்டும் தான்.

அதுவும் காரில் பயணித்த பின்னர் காட்டுக்குள் துரத்துவதும் இறுதியாக கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்படும் ஒரு லொக்கேஷன் மட்டும் தான் திரைப்படத்தின் பலம்.

மற்றபடி இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஹர்ஷ் வர்தன் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வச்சி செஞ்சுட்டார்.

ஏன் இப்படி ஒரு திரை கதையை எடுத்தார்? என்பது எல்லாம் அவருக்கு மட்டும் தான் வெளிச்சம்..

மொத்தத்தில் இன் கார் திரைப்படம் சுமார்.