181 திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2./5
நடிகர் நடிகைகள் :- ஜெமினி ரைக்கர், ரீனா கிருஷ்ணன்,
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- இசாக்.
ஒளிப்பதிவு :- பிரசாத் D.F.Tech.
படத்தொகுப்பு :- எஸ்.தேவராஜ்
இசை :- ஷமீல் .ஜே.
தயாரிப்பு :- சாய்ராஜ் ஃபிலிம் ஒர்க்ஸ்.
தயாரிப்பாளர் :- பி.பி.எஸ் இசா குகா.
ரேட்டிங் :- 2 / 5
தமிழ் திரைப்பட உலகில் அகடம் திரைப்படம் மூலம் இயக்குனராகி அதன்பின் நடிகர் ஆரி நடிப்பில் நாகேஷ் திரையரங்கம் தற்போது 181 திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
அப்படி திரைப்படத்துறையில் போராடும் திரைப்பட இயக்குனரின் கதை தான் இந்த 181 திரைப்படம்.
திரைப்பட உலகில் இயக்குனராக வேண்டுமென போராடிக் கொண்டிருக்கிறார் கதாநாயகன் ஜெமினி.
கதாநாயகன் ஜெமினி எப்படியாவது ஒரு நல்ல திரைப்படத்தை இயக்கி விட வேண்டும் என ஆசைப்படும் கதாநாயகன் ஜெமினி பல கனவுகளோடு இருந்து வருகிறார்.
திரைப்பட துறையிவ் வாய்ப்பு தேடி பல தயாரிப்பு கம்பெனிகளில் கதையோடு அலைகிறார்.
ஒரு தயாரிப்பாளர் மூன்று நாட்களில் புதியதாக ஒரு கதையை எழுதிக்கொண்டு வரும்படி சொல்ல கதை மற்றும் திரைக்கதை எழுதுவதற்காக காட்டுப்பகுதியில் இருக்கும் தனது மனைவிக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு தனது மனைவி ரீனா கிருஷ்ணனையும் அழைத்து செல்கிறார்.
ஆனால் கதாநாயகன் ஜெமினிக்கு கதை எழுதுவதற்கு பல விதமான தடைகள் வருகிறது.
அப்போது அந்த பண்ணை வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதை இருவரும் தனித் தனியாக உணர்ந்து அச்சத்தில் உறைகிறார்கள்.
அமானுஷ்யசக்தி தன் பண்ணை வீட்டுக்குள் ஏன் நடமாடுகிறது என்பதை அறிந்து மேலும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
அங்கு அமானுஷ்ய சக்தி ஒன்று கதாநாயகன் ஜெமினி மற்றும் அவரது மனைவி ரீனாவுக்கு தொந்தரவு கொடுக்கிறது.
மேலும் கதாநாயகன் ஜெமினியை கதை எழுத விடாமல் பல தடைகளை அந்த அமானுஷ்ய சக்தி செய்து தடுக்கிறது.
இறுதியில் கதாநாயகன் ஜெமினி கதையை எழுதி முடித்தாரா? முடிக்கவில்லையா? கதாநாயகன் ஜெமினியை தொந்தரவு செய்யும் அமானுஷ்ய சக்தி எது? எதற்காக தன்னை சொந்தரவு செய்கிறது? என்பதுதான் இந்த 181 திரைப்படத்தின் மீதிக்கதை.
இநத 181 திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெமினி நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக வரும் ஜெமினி, இயக்குநருக்கான கதாபாத்திரம் அறிந்து மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த 181 திரைப்படத்தில் கதாநாயகியாக வரும் ரீனா கிருஷ்ணன் அழகில் கவனம் ஈர்க்கிறார்.
இறுதிக் காட்சியில் நடிப்பில் ஆவேசமும் காட்டி உள்ளார்.
அமானுஷ்ய சக்தியாக வரும் காவ்யா, ஒரு சில இடங்களில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
நண்பர்களாக வருபவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
அபலைப் பெண்ணாக வரும் காவ்யா நடிப்பு கவனம் பெறுகிறது.
அவரது முடிவு பரிதாபம்.
திரைப்படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஷமீல் திகில் கதைக்கு தேவையான பரபரப்பான இசையை கொடுத்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் பிரசாத்தின் கேமரா கோணங்கள் காட்டு பங்களா பேய் திகிலுக்கு பெரிதும் உதவுகிறது.
கிளைமாக்சில் இடம்பெற்றுள்ள வரம்பு மீறிய காட்சிகள் திரைப்படத்தின் பலவீனம்.
வழக்கமான பேய் கதைக்குள் பெண்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் சமூக விஷயங்களை வைத்து விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் இசாக்.
திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது வருத்தம்.
அதுபோல், பிளாஷ்பேக் வரும் காட்சி மனதில் பதியவில்லை.
ஏற்கனவே வந்த பழைய கதையை தூசி தட்டி எடுத்து இருக்கிறார் இயக்குனர் இசாக்.
மொத்தத்தில் 181 – திரைப்படம் திகில் கம்மியாக உள்ளது.