2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்

சம்சுங் நிறுவனத்தின் கலக்ஸி எஸ்-10 வகை ஸ்மார்ட் கைப்பேசிகள் 2019 ஆண்டில் சந்தைபடுத்தப்படவுள்ளன. இந்நிலையில் கலக்ஸி எஸ்-10 ஸ்மார்ட் போன்களின் சிறப்பம்சங்கள் குறித்த செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இந்த கைப்பேசியில் பிளஸ் மற்றும் பிளட் என மூன்று வித வேரியன்ட்களில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கமான மொடலில் சந்தைக்கு வரவுள்ள இத்தொலைபேசியில் ஹுவாய் மெட் 20 ப்ரோ போன்றே வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

6.1 இன்ச் ஸ்கிரீன் அளவுகளை கொண்டுள்ள இத்தொலைபேசி 128 படி மெமரி கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொலைபேசியின் விலை 799 யூரோ என குறிப்பிடப்பட்டுள்ளது.