24ம் புலிகேசி யோகிபாபு…?

தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகராக ஒரு கால கட்டத்தில் வலம் வந்தவர் வடிவேல். இவரது காமெடிக்கு ரஜினி மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களும் ரசிகர்களாக உள்ளனர்.

இவரது நடிப்பில் வெளியான 23ம் புலிகேசி படம் தமிழ் சினிமாவில் காமெடி படங்களில் முக்கிய படமாக உள்ளது.வடிவேலுக்கு வந்த சில பிரச்சனையால் சில காலங்கள் படத்தில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் இவர் 24ம் புலிகேசி திரைப்படத்தில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் தயாரிப்பாளரும் இயக்குனரும் ஆன ஷங்கர்வுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தற்போது வடிவேலுக்கு பதிலாக யோகிபாபுவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.