தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தனி அதிகாரி – நீதிமன்றம் அதிரடி முடிவு.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஷால் தலைவராக பொறுப்பேற்றிருந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரியாக என்.சேகர் என்பவரை நியமித்தது. இதனை தொடர்ந்து தனி அதிகாரி தனக்கு உதவியாக செயல்பட பாரதிராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட தற்காலிக குழுவை நியமனம் செய்தார்.
இந்த குழுவின் நியமனத்திற்கு தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவியாக நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து இந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.