தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படத்தில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்துக்கான தலைவராக மூத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே இயக்குநர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாரதிராஜா நேற்று அறிவித்தார். நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து ஜூலை 14ஆம் தேதி தேர்தல் நடத்த பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.  

இந்நிலையில் தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.