4 தொகுதியின் இடைத்தேர்தலுக்கு 1ம் தேதி பிரச்சாரத்தை துவங்கவுள்ளார் ஸ்டாலின்.

அண்மையில் தி.மு.க தலைமை கழகம் ஓர் அறிக்கையினை வெளிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, “மே 19ந் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ‘மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி’யின் சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் இதோ

1,2ம் தேதி:- ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதி.

3, 4ம் தேதி:- திருப்பரங்குன்றம் தொகுதி.

5, 6ம் தேதி:- சூலூர் தொகுதி.

7, 8ம் தேதி:- அரவக்குறிச்சி.