5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்

தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படம் 2007- ஆம் ஆண்டு வெளியானது.

‘பொல்லாதவன்’ படத்துக்குப் பிறகு 4 வருட இடைவெளிக்குப் பிறகு, 2011ல் ஆடுகளம் படத்தை இயக்கினார். பிறகு, 2016ல் விசாரணை படத்தை இயக்கியவர் இப்போது வட சென்னை படத்தை இயக்கியுள்ளார்.

11 வருடங்களில் 4 படங்களை மட்டுமே இதுவரை இயக்கியுள்ள வெற்றிமாறன் ‘விசாரணை’ படம் தவிர்த்து மற்ற மூன்று படங்களிலும் தனுஷையே இயக்கியுள்ளார்.

‘வடசென்னை’ படம், 2 பாகங்களாக உருவாக இருக்கிறது.

2 ஆம் பாகம் தொடங்குவதற்கு முன்னதாக, தன்னுடைய அடுத்த படத்தையும் தனுஷை ஹீரோவாக வைத்து இயக்கப் போகிறார் வெற்றிமாறன்.
இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.