6வது நேஷ்னல் அவார்ட்ஸ்: ‘மகாநடி’ படத்துக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது
இந்திய சினிமாவிற்கான 66வது தேசிய விருதுகள் இன்று ஆகஸ்ட் 9ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுகளை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
இந்த அறிவிப்பினை விருது கமிட்டி நடுவர்க்குழு தலைவர் ராகுல் ரவெய்ல் அறிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது…
இந்தாண்டில் மட்டும் 419 படங்கள் போட்டியிட்டன. இவற்றில் 31 பிரிவுகளில் சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தாண்டில் முதன்முறையாக, படப்பிடிப்பிற்கு ஏற்ற மாநிலம் என்ற புதிய விருது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த விருதினை, உத்தர்காண்ட் மாநிலம் வென்றுள்ளது. (சினிமா ஃபிரண்ட்லி ஸ்டேட் அவார்ட்)
மற்ற விருதுகள் விவரம்..
சிறந்த தமிழ்ப்படம் – பாரம்
சிறந்த நடிகர் : அந்தாதுண் படத்திற்காக ஆயுஷ்மான் குரானா, உரி படத்திற்காக விக்கி கவுசல்
சிறந்த நடிகை – நடிகையர் திலகம் படத்திற்காக கீர்த்தி சுரேஷ்
சிறந்த ஆக்ஷன் திரைப்படம் : கேஜிஎஃப் சாப்டர் 1
சிறந்த நடனம் – பத்மாவத் படத்திற்காக கொமார்
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் – கேஜிஎஃப்
சிறந்த சமூக படத்திற்கான விருது அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பேட்மேன் திரைப்படம் வென்றது.
சிறந்த தெலுங்கு மொழி படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆடை வடிமைப்பாளர் விருதும் இந்த படத்திற்கே வழங்க்கப்பட்டுள்ளது.
சிறந்த துணை நடிகை விருது ‘பதாய் ஹோ’ இந்தி படத்தில் நடித்த சுரேகாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த கோரியோகிராபர் விருது பத்மாவத் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சிறந்த பாடகருக்கான விருதை பத்மாவத் படத்தின் மிஸிரியா பாடலை பாடிய அர்ஜித் சிங்கிற்கு வழங்கப்பட்டது.