6 அத்தியாயம்

படம்:  6 அத்தியாயம்
 நடிப்பு: தமன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, பாப் சுரேஷ், பேபி சாதன்யா, திவ்யா, கிஷோர், சஞ்சீவ், காயத்ரி, விஷ்ணு, சந்திரகாந்த்தா, வினோத் கிஷன், அவிந்த் ராஜகோபால்.
இசை: பி.சி.சாம், தாஜ்நூர், ஜோஸ் பிராக்லின்
இயக்கம்: கேபிள் பி.சங்கர், சங்கத் வி.தியாகராஜன், அஜயன் பாலன், சுரேஷ்,  லோகேஷ், sridhar வெங்கடேசன்
 
 
வழக்கமான படம் என்பதைவிட இது உலக பாணியிலான சினிமா எனலாம். வெவ்வவேறு கதைக்களத்துடன் உருவாகும் நான்கு குறும்படங்களை ஒன்றிணைத்து அந்தாலஜி பாணியில் படங்கள் வெளியிடப்படுவதுண்டு. இந்த படங்களின் கிளைமாக்ஸ் ஒவ்வொரு கதைமுடிவில் தெரிந்துவிடும். அந்தபாணியிலிருந்து சற்று விலகி உருவாகியிருக்கிறது 6 அத்தியாயம். இதில் வெவ்வேறு கதை அமைப்பாக இருந்தாலும் எல்லாமே பேய் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு படத்தையும் வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். 
முதல்பாதிவரை 5 படங்கள் திரையிடப்பட்டு கிளைமாக்ஸுக்கு முன்னதாக நிறுத்தப்படுகிறது. இடைவேளைக்கு பிறகு 6வது கதை தொடங்கி பிறகு ஒவ்வொரு படத்தின் முன்னோட்டத்துடன் ஒவ்வொரு கிளைமாக்ஸும் சொல்லப்படுகிறது. இதுவொரு புதுஅனுபவம்தான். படத்துக்கு டைட்டில் 6 அத்தியாயம் என்றிருந்தாலும் ஒவ்வொரு குறும்படத்துக்கும் ஒரு டைட்டில் உள்ளது. கேபிள் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ, சங்கர் வி.தியாகராஜன் இயக்கத்தில் இனி தொடரும், அஜயன் பாலா இயக்கத்தில் மிசை, சுரேஷ் இவ் இயக்கத்தில் அனாமிகா, லோகேஷ் இயக்கத்தில் சூப் பாய் சுப்ரமணி, sridhar வெங்கடேசன் இயக்கத்தில் சித்திரம் கொல்லுதடி ஆகிய படங்கள் வரிசையாக திரையில் ஓடுகிறது. எக்ஸிகியூடிவ் தயாரிப்பாளர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார் கேபிள் சங்கர்
தனித்தனியாக ஒவ்வொன்றையும் விமர்சிப்பதைவிட ஒட்டுமொத்த கருத்தாகவே இதை பார்க்க வேண்டி உள்ளது. குறிப்பாக கோகிலா புத்தகத்தை படித்து சித்திரம் வரைவதும் அப்போது பேய் புறப்பட்டு பழிவாங்குவதும் திக் திக் சமாச்சாரங்கள். தனியாக காட்டுபகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று அங்கு பேயிடம் சிக்கி திணறும் நாயகன், ஓவியத்துக்கு கண் திறக்கும் நேரத்தில் எழும் பின்னணி இசை பயமுறுத்துகிறது. மற்றொரு குறும்படத்தில் இடம்பெறும் நாய்கள் உல்லாசமாக இருக்கும்போது கல் எறிவதால் அந்த நாய் பேயாக உருவமில்லாமல் வந்து நாயகனை தொந்தரவு செய்கிறது என்ற சஸ்பென்ஸ் உடையும்போது அரங்கே அமர்க்களப்படுகிறது. 
 ஒரேபாணியிலான படங்கள் வருவதால்  ஒரு படத்தின் முழுகதையையும் ரசிகர்கள் ஞபாகம் வைத்துக்கொள்வதே குழப்பமான நிலையை உருவாக்குகிறது. இதில் 6 திகில் கதைகள் என்றாலும் வெவ்வேறு நட்சத்திரங்கள் ஒவவொரு படத்திலும் நடித்திருப்பதால் ஒன்றிரண்டு முகங்களை தவிர மற்றவர்களை ஞாபத்தில் வைப்பது சிரமமாகே இருக்கிறது. 
‘6 அத்தியாயம்’ 5 பெரிய பேய் ஒரு குட்டி பேய் கூடுதல் இணைப்பாக ஒரு நாய் பேய்