7/ஜி திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், ரோஷன் பஷீர், சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கிராஜா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஹாரூன்.

ஒளிப்பதிவாளர் :- கண்ணா.

படத்தொகுப்பாளர் :- பிஜு.வி. டான் போஸ்கோ.

இசையமைப்பாளர் :- சித்தார்த் விபின்.

தயாரிப்பு நிறுவனம் :- ட்ரீம் ஹவுஸ்.

தயாரிப்பாளர் :- ஹாரூன்.

ரேட்டிங் :- 2.75/5.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் வாழ்ந்து வரும் கதாநாயகி ஸ்மிருதி வெங்கட், தனது கணவர் கதாநாயகன் ரோஷன் பஷீர் சேர்ந்து ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது கனவு வீடு ஒன்றை வாங்குகிறார்கள், அவர்கள் வாங்கும் கனவு வீட்டின் கதவு எண் தான் 7/G இதைத்தான் திரைப்படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

கதாநாயகி ஸ்முருதி வெங்கட் தன் கணவர் கதாநாயகன் ரோஷன் பஷீர் இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனுடன் அடுக்குடிமாடி குடியிருப்பில் வாங்கிய தனது கனவு இல்லமான பல கனவுகளுடன் குடியேறுகிறார்கள்.

தனது வாழ்க்கையில் தனக்கு சொந்த வீடு வாங்க வேண்டுமென நீண்டநாள் கனவு நிறைவேறியதால் கதாநாயகி ஸ்முருதி வெங்கட் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறார்.

மறுபக்கம், கதாநாயகன் ரோஷன் பஷீரின் அலுவலக தோழி சினேகா குப்தா கதாநாயகன் ரோஷன் பஷீரின் அடைவதற்காக மாயமந்திர முயற்சிகளில் ஈடுபடுவதோடு, கதாநாயகி ஸ்முருதி வெங்கட் புதிய வீட்டில் சூனியம் செய்யப்பட்ட பொம்மையை சினேகா குப்தா வைக்கிறார்.

இதற்கிடையே, கதாநாயகன் ரோஷன் பஷீர் அலுவலகத்தில் வேலை விஷயமாக பெங்களூர் சென்றுவிட , தனியாக இருக்கும் கதாநாயகி ஸ்முருதி வெங்கட் அமானுஷ்ய சக்தியின் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்.

அந்த வீட்டில் அடைப்பட்டு இருக்கும் ஆத்மா ஒன்று திடீரென்று வெளியாகி, கதாநாயகி ஸ்முருதி வெங்கட்டை மிரட்டுவதோடு, “இது எனது வீடு, இங்கு யாரையும் இருங்க அனுமதிக்க மாட்டேன்” என்று கூறி கதாநாயகி ஸ்முருதி வெங்கட்டை வீட்டை விட்டு விரட்டுவதற்கு அந்த ஆத்மா முயற்சிக்கிறது.

கதாநாயகி ஸ்முருதி வெங்கட்டை மிரட்டும் ஆத்மா யார்?, அந்த ஆத்மாவிற்கும் அந்த வீட்டிற்கும் என்ன சம்பந்தம் சூனியம் செய்யப்பட்ட பொம்மைக்கும் அந்த ஆத்மாவுக்கும் என்ன தொடர்பு?, கதாநாயகி ஸ்முருதி வெங்கட் அந்த அமானுஷ்ய சக்தியிடம் இருந்து  தன்னையும் தனது குழந்தையும் தனது வீட்டையும், காப்பாற்றினரா? காப்பாற்றவில்லையா?  என்பதுதான் இந்த 7G திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த 7G திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ரோஷன் பஷீர் நடித்திருக்கிறார்.

கதாநாயகி ஸ்முருதி வெங்கட்டின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஷன் பஷீர், மனைவி கதாநாயகி ஸ்முருதி வெங்கட்
ஒரு பாடல் காட்சி, அலுவலக நண்பர்களுடன் ஒரு பாடல் காட்சி என பாட்டுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்முருதி வெங்கட், காதல், பயம், தைரியம் ஏக்கம், என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்யக்கூடிய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார் ‌

திருப்புமுனை ஏற்படுத்தக் கூடிய கதாபாத்திரத்தில் பயணித்திருக்கும் சோனியா அகர்வால், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அருமையாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ரோஷன் பஷீரின் அலுவலக தோழியாக நடித்திருக்கும் சினேகா குப்தா, அருமையாக நடித்திருக்கிறார்.

ஆசைப்பட்ட தனது காதலனை அடைவதற்காக மந்திரம், சூனியம் என்று முயற்சிக்கும் காட்சிகள் நன்றாக படுத்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் சித்தார்த் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அருமையாக நடித்துள்ளார்.

இயக்குனர் சுப்பிரமணிய சிவா, கல்கி ராஜா என மற்ற கதாபாத்திரங்களில்  நடித்திருப்பவர்களுக்கு உருப்படியான வேலை ஏதும் வாங்கப்படவில்லை.

ஒளிப்பதிவாளர் கண்ணா, அப்பார்ட்மெண்டில் இருக்கும் 7G எண் கொண்ட வீட்டை மட்டுமே காட்டி ரசிகர்களை ஒளிப்பதிவின் மூலம் பயமுறுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம்.

தயாரிப்பாளர் இயக்குனர் ஹாரூண் ,திகில் கதையை வழக்கமான ஃபார்மெட்டில்  சொல்லி இருக்கிறார் பிளாக் மேஜின் போன்ற விசயங்களை பயன்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

மொத்தத்தில் – இந்த ’7ஜி’ திரைப்படம் பழைய கதைதான் என்றாலும், புதிதாக திரைக்கதை மூலம் வடிவமைத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.