தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது நடிகர் விஷால் துணை ஆணையரிடம் புகார்.. தமிழ் திரைப்பட உலகில் பரபரப்பு.

சென்னை 09 ஜூன் 2021

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது நடிகர் விஷால் துணை ஆணையரிடம் புகார்.. தமிழ் திரைப்பட உலகில் பரபரப்பு..

இரும்புத்திரை திரைப்பட பைனான்ஸ் வாங்கிய விவகாரத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் நடிகர் விஷால்.

நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது தமிழ் திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் தயாரிப்பாளர், விநியோகஸ்தராக இருப்பவர் ஆர்.பி.செளத்ரி. இவர் பல திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வருகிறார்.

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி அவரிடம் நடிகர் விஷால் கடன் பெற்று அந்த கடனை கடந்த வருடம் பிப்ரவரி மாதமே முறைப்படி திருப்பி தந்துவிட்டார்.

விஷால் அவர்கள் தன்னுடைய டிவிட்டரில் “இரும்புத்திரை திரைப்படத்திற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் தயாரிப்பாளர் திரு ஆர்.பி.சௌத்ரி அவர்கள் காசோலை, பத்திரங்கள் மற்றும் உறுதிமொழி குறிப்புகளை திருப்பி வழங்கவில்லை.

கடனுக்காக நடிகர் விஷால் தரப்பில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட செக் போன்ற பேப்பர்கள் இதுவரை ஆர்.பி.செளத்ரி தரப்பு திருப்பி அளிக்கவில்லை. அதனை பற்றி விஷால் தரப்பில் கேட்டதற்கு, செக் மற்றும் அனைத்து பேப்பர்களும் தொலைந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள்.

இதனால் நடிகர் விஷால் சார்பில் காவல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!