உடன்பிறப்பே திரை விமர்சனம். ரேட்டிங் –3.75 /5

நடிகர் நடிகைகள் – ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி, சூரி, கலையரசன், சிஜாரோஸ், ஆடுகளம் நரேன், சித்தார்த், நிவேதிதா சதீஷ், வேல்ராஜ், வேல் ராமமூர்த்தி, தீபா, நமோ நாராயணன், மற்றும் பலர்.
தயாரிப்பு – 2டி என்டர்டெய்ன்மென்ட்
ஜோதிகா & சூர்யா.
இயக்கம் – இரா.சரவணன்.
ஒளிப்பதிவு – வேல்ராஜ் ISC
படத்தொகுப்பு – ரூநன்..
இசை – டி.இமான்..
திரைப்படம் ஒடிடியில் வெளியான தேதி – 14 அக்டோபர் 2021
ரேட்டிங் –3.75 /5
நடிகை ஜோதிகாவின் 50 வது திரைப்படமாக உருவாக்கி உள்ள உடன்பிறப்பே வெளியாகியிருக்கிறது.
திருமணத்துக்குப் பின் நடிக்காமலிருந்த நடிகை ஜோதிகா நல்ல நல்ல கதைகளாக அலசி ஆராய்ந்தே நடிக்கிறார்.
அப்படிப்பட்டவர் தனது 50 வது திரைப்படமாக உடன்பிறப்பேயை தேர்வு செய்துள்ளார் என்றால் திரைப்படத்தின் கதை அவருக்கு பிடித்துள்ளது என்றுதான் அர்த்தம்.
முன்னாள் பத்திரிகையாளர் இரா சரவணன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.
தஞ்சை விவசாயிகள்
பிரச்சனையை மையப்படுத்தி வெளியான கத்துக்குட்டி இரா சரவணனின்
முதல் திரைப்படம்.
கத்துக்குட்டி திரைப்படத்திற்கு
நல்ல விமர்சனங்கள் கிடைத்த அளவுக்கு வசூல் கிடைக்கவில்லை.
அடுத்ததாக இரா சரவணன் உடன்பிறப்பே கதையை தயார் செய்து அதனை திரைப்படமாக்க தயாரிப்பாளர் தேடி பல வருடங்கள் அலைந்துள்ளார்.
கடைசியாக சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்டில் கதை கேட்டிருக்கிறார்கள்.
கதையை கேட்ட 2டி நிறுவனம்” இது ஒரு நவீன பாசமலர்” என்று பாராட்டினார்கள் என்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.
எத்தனை சென்டிமென்ட் திரைப்படங்கள் வந்தாலும் தமிழ் திரைப்பட உலகில் அழிக்க முடியாத ஒரு சென்டிமென்ட் அண்ணன், தங்கை சென்டிமென்ட்தான்.
நடிகர் திலகம் நடித்த பாசமலர் தொடங்கி இன்று வரை பல்வேறு திரைப்படங்களுக்கும் அந்த அண்ணன், தங்கை சென்டிமென்ட்டை பல இயக்குனர்களும் பல்வேறு விதமாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
தமிழ் திரைப்பட உலகில் உள்ள ரசிகர்கள் குடுப்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள
இந்த உடன்பிறப்பே
திரைப்படம்.
நேரடியாக ஆன்லைன் ஓடிடி தளத்தில் ஆயுத பூஜை சிறப்பு திரைப்படமாக உடன்பிறப்பே 2021 அக்டோபர் 14ல் அமேசான் பிரைம் வீடியோ வெளியாகியது.
ஜோதிகா 50 உடன்பிறப்பே” திரைப்படம் அண்ணண் தங்கை பாச உணர்வுகளை மையப்படுத்தி சமூக அக்கறை, நகைச்சுவை கலந்த குடும்ப பாங்கான திரைப்படமாக வெளியாகியுள்ளது.
இந்த உடன்பிறப்பே திரைப்படம் தலைப்பிலிருந்தே இது ஒரு பாசக்கதை என்பது திரைப்படம் பார்க்காமலேயே புரிந்துவிடுகிறது.
அண்ணன், தங்கை பாசத்தை இருவருமே பேசிக் கொள்ளவில்லை என்றாலும் அதை உணர்வுபூர்வமாகச உணர்ச்சி பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன்.
கதாநாயகி ஜோதிகா அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள ஒரு கதையும் கதாபாத்திரமாக உள்ள திரைப்படத்தைத் தாங்கிப் பிடிக்கும் தராசாக இருக்கிறார் கதாநாயகி ஜோதிகா.
ஒரு பக்கம் கணவர் சமுத்திரக்கனி மற்றொரு பக்கம் அண்ணன் சசிகுமார். இருவரையும் விட்டுக் கொடுக்காமல் எப்படி பேலன்ஸ் செய்ய வேண்டுமோ அப்படி செய்கிறார் கதாநாயகி ஜோதிகா .
தஞ்சாவூரை சேர்ந்த பெண்ணாகவே மாறியிருக்கிறார் கதாநாயகி ஜோதிகா.
கிராமத்தில் சசிகுமார், கதாநாயகி ஜோதிகா இருவரும் அண்ணன் தங்கையாக வாழ்ந்து வருகின்றனர்.
கதாநாயகி ஜோதிகாவின் கணவர் பள்ளி ஆசிரியராக இருக்கும் சமுத்திரக்கனி.
அடிதடி, ஊர் பஞ்சாயத்து என இருக்கும் சசிகுமார் நடவடிக்கை பிடிக்காமல் இருக்கும் சமுத்திரக்கனி, அதனால் தன்னுடைய இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தையை பறி கொடுத்து விடுகிறார் சமுத்திரக்கனி.
இனி எந்த ஜென்மத்திற்கும்
ஜோதிகாவின் அண்ணன்
சசிகுமாருடன் இனிமேல் உறவு இல்லை என பிரிந்து செல்கிறார் சமுத்திரக்கனி.
தனது அண்ணன் சசிகுமாரும் கணவன் சமுத்திரகனியும் ஒன்று சேர மாட்டார்களா என ஏங்கித் தவிக்கிறார் கதாநாயகி ஜோதிகா.
கதாநாயகி ஜோதிகாவின் அண்ணன் சசிகுமாரும் அவருடைய கணவர் சமுத்திரகனியும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா
என்பதுதான் இந்த உடன்பிறப்பே
திரைப்படத்தின் மீதிக் கதை.
கதாநாயகி ஜோதிகா மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார்.
அவர் நடிக்கும் பொது அவருடைய கண்ணும், உடம்பில் உள்ள தசைகளும் சேர்ந்து நடிக்கின்றன.
தன்னுடைய அண்ணனை பற்றி பேசும்போது அவருடைய கண்களில் கண்ணீர் தாரையாக வடித்து நம்மையும் சேர்ந்து அழவைத்து விடுகிறார்.
கதாநாயகி ஜோதிகா பேசும்
ஒவ்வொரு வசனமும் ரசிகர்களை ஈர்க்கும்படியாக உள்ளது .
சசிகுமார் தன்னுடைய ஜோதிகாவின் அண்ணன் கதாபாத்திரத்தை மிகவும் தத்ரூபமாக செய்துள்ளார்.
அவருடைய முதல் காட்சியில் என்ட்ரி பிரமாதம் ஜோதிகாவுக்கு இணையாக சசிகுமாரும் நடிப்பு போல் இல்லாமல் மிக அருமையாகவும் உண்மையாகவும் அவருடைய அண்ணண் தங்கைக்கு காட்டும் பாசத்தை உணர்வது போல் உள்ளது.
சமுத்திரக்கனி கதாநாயகி ஜோதிகாவுக்கு கணவராக நடித்துள்ளார்.
சமுத்திரக்கனி நீதி நேர்மை பற்றி எப்போதும் விழிப்புணர்வு கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கண்ணியமான பள்ளி ஆசிரியராக தன்னுடைய நடிப்பை வழக்கம்போல் கனகச்சிதமாக நடித்துள்ளார்.
சமுத்திரகனி இயக்கி நடித்த விநோதய சித்தம் திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமான சமுத்திரக்கனியைப் பார்த்துவிட்டு.
மறுநாளே இந்த உடன்பிறப்பே திரைப்படத்தையும் பார்த்தோம்.
மீண்டும் வழக்கமான சமுத்திரக்கனி வந்துவிட்டாரே என்று வருத்தப்பட வைத்தது.
சூரி இதற்கு முன்பு கடைசியாக நடித்த ஒரு சில திரைப்படங்களில் அவருடைய நகைச்சுவை சரியாக எடுபடவில்லை.
அதற்கும் சேர்த்து இந்த திரைப்ப்படத்தில் திரைப்படம் தொடங்கியதிலிருந்து கடைசிவரைக்கும் கதையோடு சேர்ந்து நகைச்சுவையில் சக்கை போடு போடுகிறார்.
இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் மலர்ந்தே தீரும் என்று கூறுகிறார் சூரி.
சூரிக்கும் இயக்குநரும் பாரதிய ஜனதா கட்சியில் சேரும் எண்ணம் ஏதேனும் உள்ளதா என தெரியவில்லை
அது எதை மனதில் வைத்து கூறுகிறார் என்று தெரியவில்லை.
சூரி மொத்தத்தில் உடன்பிறப்பு திரைப்படத்தில் சூரியின் காமெடி சூப்பர்!
கிராமத்து திரைப்படங்களுக்கு நகைச்சுவைக்கு உடனே கூப்பிட வேண்டும் சூரியை என்ற நிலைதான் உள்ளது.
அந்த நம்பிக்கையை ஏமாற்றாமல் காப்பாற்றுகிறார் சூரி.
திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களும் ஆனால் அனைவருமே ஒரு சில காட்சிகளில் வந்து செல்கிறார்கள்.
சசிகுமார் மனைவியாக சிஜா ரோஸ். அமைதியான அழகான முகம் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
அதற்குள் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வந்தது மிக ஆச்சரியம் தான்.
வில்லனாக வரும் கலையரசன் அவரது அப்பாவாக ஊரின் பெரிய மனிதராக ஆடுகளம் நரேன். சசிகுமாரின் உறவினர்களாக வேலராமமூர்த்தி, தீபா அனைவரும் கொடுத்த வேலையை கரெக்டாக செய்திருக்கிறார்கள்.
சசிகுமாரின் மகனாக நடித்திருக்கும் புதுமுகம் சித்தார்த், கதாநாயகி ஜோதிகாவின் மகளாக நிவேதிதா சதீஷ் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்.
இந்த இருவரும் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரக் காரணமாக இருக்கிறார்கள்.
உடன்பிறப்பே” படத்திற்கு
டி இமான் இசையமைத்துள்ளார்.
பின்னணி இசை பிரமாதம், பாடலுக்கு இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
எடிட்டிங் ரூபன் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.
இந்த உடன்பிறப்பே திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு வேல்ராஜ் அது மட்டுமின்றி திரைப்படத்தின் முழுவதும் ஒரு முக்கியமான காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இவருடைய ஒளிப்பதிவு மிகவும் பிரமாண்டமாக அமைந்துள்ளது.
இது திரைபடத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்து இருக்கிறது.
கத்துக்குட்டி திரைப்படத்தில் அறிமுகமான இயக்குனர் இரா.சரவணன், கத்துக்குட்டியில் இருந்து மீண்டு வரவேண்டும்.
உடன்பிறப்பு… பார்த்து முடிக்கும் போது மறுபிறப்பாக தெரிகிறது.
கதை என்கிற வகையில் ஓகேதான்.
திரைக்கதை என்று பார்த்தால் உடன்பிறப்பே… உதவாத பிறப்பாக தான் இருக்கிறது.
குடும்பத்துடன் சென்று கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்
மொத்தத்தில் உடன்பிறப்பே திரைப்படம் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே.!











