மாநாடு திரைப்படம் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

சென்னை 24 நவம்பர் 2021 மாநாடு திரைப்படம் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இந்த திரைப்படம் ஆரம்பத்தில் இருந்தே பலவிதமான தடங்கல்கள் பலவிதமான இடையூறுகளைக் கடந்து நாளை 25 நவம்பர் வெளியாக இருந்த நடிகர் சிலம்பரசன் டிஆர் நடித்த மாநாடு திரைப்படம் மறுபடியும் வெளியிடை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட பதிவில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்.
·
நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்

தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்…என்று கூறியிருக்கிறார்.

நேற்று முதலே இப்படத்துக்கு முன்பதிவு துவங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் சிலம்பரசன் டிஆரின் ரசிகர்கள் மிக மன வேதனை ஆளாகியுள்ளனர்.

error: Content is protected !!