பாசத்திற்க்கும் நேசத்திற்க்கும் உரிய அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடக சகோதரர்களுக்கு காவல் துறையினருக்கு ஒரு பணிவான வேண்டுகோள் இயக்குநர் விக்ரமன்.
சென்னை 18 டிசம்பர் 2021
பாசத்திற்க்கும் நேசத்திற்க்கும் உரிய அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடக சகோதரர்களுக்கு காவல் துறையினருக்கு ஒரு பணிவான வேண்டுகோள்
இயக்குநர் விக்ரமன்.
இயக்குநர் விக்ரமன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,
பாசத்திற்க்கும் நேசத்திற்க்கும் உரிய அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடக சகோதரர்களுக்கு காவல் துறையினருக்கு இயக்குநர் விக்ரமனின் பணிவான வேண்டுகோள்.
நேற்று செய்தித்தாள்களில் ஒரு செய்தி ஒன்று படித்தேன், ”நகை பறிப்பு, உதவி இயக்குனர் கைது” என்று, ஆனால் அவர் உதவி இயக்குநராக இருப்பாரா என்று எங்களுக்கு 100% சந்தேகம் உள்ளது.
நிச்சயமாக அவர் உதவி இயக்குநராக இருக்கவே மாட்டார்.
எத்தனையோ உதவி இயக்குநர்கள் கனவுகளுடனும், இலட்சியங்களுடனும் திரைத்துரைக்கு வந்து சாப்பாட்டிற்க்கு வழி இல்லாமல், இருக்க இடமில்லாமல், போராடி தன் லட்சியத்தை விட்டுக்கொடுக்காமல், நேர்மையாகவும், நாணயமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் பட்டினி கிடந்தாலும் கிடப்பார்களே தவிர இதுபோன்ற திருட்டு செயல்களில் எக்காரணத்தை கொண்டும் ஈடுபடமாட்டார்கள்.
எத்தைனையோ உதவி இயக்குநர்கள் கனவுகளோடும் லட்சியங்களோடும், நேர்மையான முறையில் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக இது போன்ற செய்திகளை தயவுசெய்து வெளிவிட வேண்டாம்.
இது போன்ற நகை பறிப்பில் ஈடுபடுவோர் யார்? அவர்களின் உண்மையான பிண்ணனி என்ன? என்பதை அறிந்து அதன் பிறகு அவர் உதவி இயக்குநரா? இல்லையா? என்று தெரிந்துக்கொன்டு செய்தியை வெளியிடுங்கள்.
அவசரப்பட்டு இதுபோன்ற செய்திகளை வெளியிட்டால் நிறைய உதவி இயக்குநர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே உதவி இயக்குநர்களுக்கு வீடு வாடகைக்கு கிடைப்பது மிக சிரமமாக இருக்கிறது, திருமணத்திற்க்கு பெண் கிடைப்பது சிரமம். இது போன்ற பல சிரமங்களையும் கஷ்டங்களையும் தாண்டிக் கொண்டு தனது லட்சியங்களை சுமந்துக்கொண்டு அவர்கள் போராடி வாழ்ந்துக் கொண்டிருக்கும் வேளையில் இது போன்ற செய்திகள் வருவது மனதை மிகவும் பாதிக்கிறது. வேதனையடைய செய்கிறது.
அவர்கள் உறவினர்கள், நண்பர்கள் மத்தியிலும் தவறான கண்ணோட்டத்தை அவர்கள் மீது ஏற்படுத்துகிறது. ஆகவே இதுபோன்ற செய்திகளை தவிருங்கள். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுப்படுபவர்களை நகை பறிப்பு, இளைஞர் கைது என்று குறிப்பிடுங்கள்.
அவர் ஒரு உதவி இயக்குநர் என்று விஷயம் தெரியாமல் தயவுசெய்து குறிப்பிடாதீர்கள்.
என்று பணிவாக உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், காவல் துறையினருக்கு ஒரு பணிவான வேண்டுகோள்
இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் அவர் வாயால் அவர் உதவி இயக்குநர் என்று கூறியதை நம்பி செய்தியை வெளியிடாமல் விசாரித்து அவர் உண்மையிலேயே உதவி இயக்குநரா இல்லையா என்பதை தீர விசாரித்து அதன் பின்பு பத்திரிகைகளுக்கு செய்தி வெளியிடுமாறு பணிவண்புடன் வேண்டிக்கொள்கிறேன்.












