ரைட்டர் திரை விமர்சனம் ரேட்டிங் –3.5 /5

நடிகர் நடிகைகள் – சமுத்திரக்கனி, இனியா, ஆண்டனி, மகேஸ்வரி, ஹரி கிருஷ்ணன், சுப்ரமணிய சிவா, GM சுந்தர், கவிதாபாரதி, மேற்கு தோடர்ச்சி மலை ஆண்டனி, லயர் லெமுவேல், லக்கி குமார், தீலிபன், மற்றும் பலர்.

இயக்கம் – பிராங்கிளின் ஜேக்கப்.

ஒளிப்பதிவு – பிரதீப் காளி ராஜா.
.
படத்தொகுப்பு – மணிகண்டன் சிவகுமார்..

இசை – கோவிந்த் வசந்தா.

தயாரிப்பு – நீலம் புரோடக்சன்ஸ்.

ரேட்டிங் –3.5 /5

தமிழ் திரைப்பட உலகில் காவல் துறையை மையப்படுத்திய பல திரைப்படங்கள் வந்துள்ளது.

அந்த வரிசையில் காவல்துறையை மையப் படுத்தி தற்போது வந்துள்ள திரைப்படம்தான் ரைட்டர்.

இந்த ‘ரைட்டர்’ திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ள கதை களம் இதுவரை தமிழ் திரைப்பட உலகில் சொல்லப்படாத ஒரு கதை.

கதாநாயகன் சமுத்திரக்கனி காவல் துறையினருக்கு ஒரு சங்கம் வேண்டும் என நினைக்கும் காவல் துறையை சேர்ந்த ஒரு ரைட்டர்.

காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்காக தனியாக சங்கம் ஒன்று வேண்டும் என்று பல வருடமாக சட்ட போராட்டம் செய்து வருகிறார் கதாநாயகன் சமுத்திரக்கனி.

திருச்சி அருகில் உள்ள திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ரைட்டராக பணிபுரியும் வரும் கதாநாயகன் சமுத்திரகனி.

அந்த காவல்துறையில் பணிபுரியும் அனைவருக்கும் சஙகம் தேவை பிரச்சினையின் காரணமாக அவர் வேலை பார்த்து வந்த திருச்சி அருகில் உள்ள திருவெறும்பூர் காவல் நிலையத்திலிருந்து சென்னை உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றப்படுகிறார்.

இன்னும் ஒரு சில வருடங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற இருக்கும் கதாநாயகன் சமுத்திரக்கனி.

கதாநாயகன் சமுத்திரக்கனி யார் மீதும் எந்த கைதிகள் மீதும் கோபப்படாமல் இருக்கும் காவல் நிலையத்தில் ரைட்டர் பணியை மட்டுமே சீறும் சிறப்புமாக செய்து வருகிறார்.

சென்னை உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு பணியில் சேர்ந்து விடுகிறார்.

காவல்துறை உயரதிகாரி உத்தரவின் பேரில் பி.ஹெச்டி படிக்கும் மாணவரான ஹரியை ஒரு லாட்ஜில் அடைத்து வைக்கிறார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்.

திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு பணியில் சேர்ந்து கதாநாயகன் சமுத்திரக்கனி அங்கு அவருக்கு வயது முதிர்ந்த மனிதன் என்று பாராமலும் காவல்துறையில் அனுபவமிக்க கதாநாயகன் சமுத்திரக்கனிக்கு மரியாதை தராமல் பி.ஹெச்டி படிக்கும் மாணவரான ஹரியை அடைத்து வைத்திருக்கும் லாட்ஜுக்கு ‘பாரா’ டூட்டி போட்டு விடுகிறார்கள்.

அவர் மீது ஏதோ ஒரு காரணத்திற்காக ‘யுஎபிஏ’ வழக்கு போடுகிறார்கள்.

ஹரிக்கு கதாநாயகன் சமுத்திரக்கனி உதவ நினைக்கிறார் அவரை காப்பாற்றினாரா? இல்லையா ?அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் பைட்டர் திரைப்படத்தின மீதிக் கதை.

இந்த வருடத்தில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனது மீது இருந்த ‘அட்வைஸ் சமுத்திரக்கனி’ என்ற இமேஜை முற்றிலும் மாற்றிக் காட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி.

இந்த ரைட்டர் திரைப்படத்தில் தங்கராஜ் ஆக அப்படியே தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார் கதாநாயகன் சமுத்திரக்கனி.

அதிலும் காவல்துறை மேலதிகாரி அவரைத் திட்டி, அடித்து அவமானப்படுத்தும் போது அதைக் கண்டு உருகும் காட்சிகளில் மிகவும் அருமையாக சொல்ல வைக்கிறார்.

தொடர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் தனது யதார்த்த நடிப்பைப் பதிவு செய்கிறார்.

திரைப்படத்தின் மற்றொரு கதாநாயகன் ஹரிகிருஷ்ணன் அன்புதுரை மிக் அருமை.

அப்பாவியான கல்லூரி மாணவராக காட்சிக்குக் காட்சி நெகிழ வைக்கிறார்.

பிளாஷ்பேக்கில் குதிரை ரைடர் ஆக ஆசைப்பட்டு மேலதிகாரின் சாதி திமிரால் உயிரை விடும் பெண் போலீஸ் ஆக இனியா.

இனியாவின் கதாபாத்திரம் மீதும் அனுதாபம் வருகிறது.

ஹரியின் அண்ணன் கதாபாத்திரம் இயக்குநர் சுப்பிரமணிய சிவா உண்மையான அண்ணன் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.

ஹரியின் அண்ணனாக சுப்பிரமணிய சிவா, தம்பி மீது அதிக பாசம் வைத்துள்ள அப்பாவி அண்ணனாக திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கண் கலங்க வைக்கிறார்.

திரைப்படத்தில் கலகலப்பான வசனங்களைப் பேசி ஆங்காங்கே கைத்தட்டல் வாங்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தில் நடித்தஆண்டனி.

இன்ஸ்பெக்டர் ஆக கவிதாபாரதி, டி.சி ஆக கவின் ஜெய் பாபு. இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் காவல் துறையில் இருக்கும் சில அதிகார துஷ்பிரயோகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன இயக்குனர்
பிராங்க்ளின் ஜேக்கப்

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பின்னணி இசையும், பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவும், மணிகண்டன் சிவகுமார் படத் தொகுப்பும், ராஜாவின் அரங்க அமைப்பும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாய் அமைந்துள்ளது.

ஒருவரை மையப்படுத்தி கதை நகர்ந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மையப் புள்ளியை விட்டு திரைக்கதை இப்படி விலகுவது ரசனையைக் குறைத்துவிடுகிறது.

திரைக்கதை சில இடங்களில் தடம் மாறி போவதை சரி செய்திருந்தால் இந்த ‘ரைட்டர்’ இன்னும் அழுத்தமாய் தடம் பதித்திருக்கும்.

மொத்தத்தில் ரைட்டர் – காவல்துறையில் உள்ள மேல் அதிகாரிகளின் அதிகாரத்தின் ஆணவம்.

error: Content is protected !!