ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற தலைப்பை போலவே, படப்பிடிப்பில் என்னுள்ளும் சந்தோஷம் நிலவியதை என்னால் உணர முடிந்தது’’ – தயாரிப்பாளர் P ரங்கநாதன் !

சென்னை 25 டிசம்பர் 2021 ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற தலைப்பை போலவே, படப்பிடிப்பில் என்னுள்ளும் சந்தோஷம் நிலவியதை என்னால் உணர முடிந்தது’’ – தயாரிப்பாளர் P ரங்கநாதன் !

கௌதம் கார்த்திக்-சேரன் இணைந்து நடித்துள்ள “ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படம் டிசம்பர் 24, 2021 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கியுள்ளார். நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 250 திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் நிலையில், ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தை தயாரித்த அனுபவம் குறித்து, ஸ்ரீவாரி படத்தின் தயாரிப்பாளர் P ரங்கநாதன் தனது மகிழ்ச்சியான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

ஸ்ரீவாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P ரங்கநாதன் கூறியதாவது..,
குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுதுபோக்கு சினிமாக்கள், எப்போதுமே திரையரங்குகளில் பெரிய அளவில் வரவேற்பை பெறும். எந்தவொரு திரைப்படத் துறையிலும், ஏன் ஹாலிவுட்டில் கூட, குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள்  உலகளாவிய ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றே வருகிறது, என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு தீவிர திரைப்பட ரசிகனாக, குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்தும்,  பொழுதுபோக்கு சினிமாக்கள், திரையரங்குகளில் பார்வையாளர்களிடையே ஏற்படுத்தும் உணர்ச்சிகளின் சாரத்தை நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறேன். அத்தகைய தருணங்கள்  தான் ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு சினிமாவை, அவர்களிடையே உள்ள உறவுகள் மற்றும் சகோதரத்துவத்தின் மதிப்புகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமாவை,உருவாக்க வேண்டும் என்ற ஆசையை, என்னுள் தூண்டியது. இது தான், பலத்த சவால்களுக்கு மத்தியிலும் இந்தப் படத்தைத் தயாரிக்கும் உத்வேகத்தை எனக்கு தந்தது.
எனது உணர்வை புரிந்துகொண்டு, இந்த திரைப்படத்திற்காக தங்களை ஆத்மார்த்தமாக அர்ப்பணித்த ஒரு அற்புதமான குழுவைப் பெற்றதற்காக, நான் மிகவும் பாக்கியவானாக கருதுகிறேன். ஒரு திரைப்படத்தின் முன்னணி நடிகர், படப்பிடிப்புத் தளத்தில் சரியான நேரத்தில் வந்து, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் இருக்கும்போது, அது ஒரு தயாரிப்பாளருக்கு மிகப்பெரும் சந்தோஷத்தை தரும். படத்தின் முதல் நாள் முதல் டப்பிங் முடியும் வரை கௌதம் கார்த்திக் அதை பொறுப்புடன் செய்வதைப் பார்த்து, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இப்படிப்பட்ட நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு எப்போதும் பேரின்பமாகவும் ஆசீர்வாதமாகவும் இருப்பார்கள். சேரன் சார் இந்தப் படத்தை தனது சொந்தக் குழந்தையாகக் கருதி, அழகாக வடிவமைத்திருக்கிறார். ஷிவாத்மிகா தனது சிறந்த நடிப்பு திறமைக்காக, திரைத்துறையில் பெரிய இடத்தை பெறுவார். சரவணன், விக்னேஷ் மற்றும் நட்சத்திர பட்டாளத்தில் உள்ள அனைவரும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை ஒரு அழகான திரைப்படமாக உருவாக்கியுள்ளனர். இப்படத்தின் தலைப்பைப் போலவே, படத்தின் உருவாக்கத்திலும், என்னுள்ளும் சந்தோஷம் நிலவியதை என்னால் உணர முடிந்தது.

உணர்வுகளாலும், அழகுகான காட்சிகளாலும் இப்படத்தை அட்டகாசமாக செதுக்கியிருக்கிறார், இயக்குநர் நந்தா பெரியசாமி. தமிழ்நாட்டில் 250 திரையரங்குகளில் இப்படத்தை பெரும்  வரவேற்புடன் வெளிடுவதை காண, மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தின் கதை மற்றும் இதன் மதிப்பை நம்பியதற்காக விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன், அவர்களின் நம்பிக்கையில் பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. குடும்ப உணர்வுகளை, உறவுகளின் கதைகளை சொல்லும் திரைப்படங்களை பார்த்து தான், நான் வளர்ந்தேன். இப்போது ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் மீண்டும் அது அரங்கேறுவதை காண மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.