சிங்கிள் ஷாட்’ டில் ., ‘அந்த இரவில்’ குறும் படத்தை நடித்து இயக்கியுள்ள வாரிசு நடிகர் !!

சென்னை 28 ஜூலை 2022 சிங்கிள் ஷாட்’ டில் ., ‘அந்த இரவில்’ குறும் படத்தை நடித்து இயக்கியுள்ள வாரிசு நடிகர் !!

ஆதேஷ் பாலா . முதன் முதலாக., ‘ஒரு கதையின் கதை’ படத்தில் அறிமுகமான நடிகர். அதன் பிறகு முண்டாசுப்பட்டி , மம்பட்டியான் , சவரகத்தி , பேட்டை , திமிரு பிடிச்சவன்… போன்ற 70-கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

தற்போது ‘பொன்னியின் செல்வன் ‘ படத்தில் முக்கியமானதொரு பாத்திரத்தில் நடித்து கொண்டு இருப்பவர்.

இது மட்டுமில்லாமல் நிக்குமா நிக்காதா, பெரியபழுவேட்டரையர், அந்த இரவில்… உள்ளிட்ட 7 குறும்படங்களில், ( இதில் சில…. சிங்கிள் ஷாட் குறும் படங்கள்…) தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடிப்பவர்.

இத்தனை சிறப்புகளுக்கும் சொந்தக்காரர் யார் ? எனக் கேட்டால் ., அவர்தான் நடிகர் பாக்கியராஜால் உருவாக்கப்பட்ட காமெடி நடிகர் சிவராமனின் மகனான நடிகர் ஆதேஷ் பாலா !!

தூறல் நின்னு போச்சு, இணைந்த கைகள், காதல் பரிசு உள்ளிட்ட 350-கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிவராமன் என்றால், இன்று ., அப்பாவின் பெயரை காப்பாற்றும் மகனாக தன் தந்தையையும் தாண்டி வலம் வருகிறார் ஆதேஷ் பாலா !

யெஸ் .,

10 நிமிட சிங்கிள் சாட் குறும்படமாக நடிகர் ஆதேஷ் பாலா நடித்து இயக்கி உள்ள படம் தான் ‘அந்த இரவில்’ .

‘அந்த இரவில்’ சிங்கிள் ஷாட் குறும்படத்தில் ., மூன்று கதாப்பாத்திரங்களை ஒரே நபராக எற்று நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஆதேஷ் பாலா என்றால் மிகையல்ல !

இந்த குறும்படத்திறக்கு இசை பல திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் !

ரமேஷ் வினாயகம் இசையில் கவிஞர் விஜேபி யின் வரிகள் வைர வரிகள்.

இந்த குறும்படத்திற்கு பேக்ரவுண்ட் வாய்ஸாக பின்னனி குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் நிழல்கள் ரவி.

படத்தொகுப்பு -அன்பு
ஒளிப்பதிவு- சுபாஷ் அலெக்சாண்டர், வளர்ந்து வரும் பி ஆர் வோ சுந்தர் பாலா , முருகவேல் மாணிக்கம், ஆல்பர்ட், கண்ணன் போன்றோர் உதவி ., இக்குறும்பட உருவாக்கத்தின் போது ஆதேஷ்பாலாவுக்கு பேருதவியாம் ! சவுண்ட் சரவணன் ராமச்சந்திரன் மற்றும் அப்துல் ரஹ்மான், ராயன்., ஸ்பான்சர் நடிகர் சின்ராசு … ஆகியோரின் உதவிகளையும் மறக்க முடியாது என்கிறார் ஆதேஷ் பாலா !

‘அந்த இரவில்’ படத்தின் பேனர் சென்னை விஜயா போரம் மால் பலாஸோ திரையரங்க வாசலில் ஆதேஷின் நண்பர்களால் பெரிதாக வைக்கப்பட்டு இருக்கிறது,

குறும்படத்திற்கு இந்த அங்கீகாரம் இதுவே முதல் முறை… என்பது குறிப்பிடத்தக்கது !

error: Content is protected !!