இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும்  “பகாசூரன்” திரைப்பட பாடல் ட்ரெண்டிங் ஆகிவருகிறது.!!!

சென்னை 12 பிப்ரவரி 2023 இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும்  “பகாசூரன்” திரைப்பட பாடல் ட்ரெண்டிங் ஆகிவருகிறது.!!!

பழைய வண்ணாரப்பேட்டை ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பகாசூரன்’.

இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார்.

‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர்.

மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசையமைக்க, ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய, கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார்.

மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

படம் வருகிற 17 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் “ஆனந்தம் கூத்தாடும்” என்ற பாடல் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றாதோடு சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகிவருகிறது.

▶️https://youtu.be/sR_ivgJKdZk

CLOSE
CLOSE
error: Content is protected !!