ஒரு இளம் பெண்ணின் அபிலாஷைகள் மற்றும் மரபுகளைக் கதைக்களமாகக்  கொண்ட உணர்ச்சிகரமான நகைச்சுவை தொடர்  குமாரி ஸ்ரீமதி இன்  டிரெய்லரை வெளியிட்டது.!!

ஒரு இளம் பெண்ணின் அபிலாஷைகள் மற்றும் மரபுகளைக் கதைக்களமாகக்  கொண்ட உணர்ச்சிகரமான நகைச்சுவை தொடர்  குமாரி ஸ்ரீமதி இன்  டிரெய்லரை வெளியிட்டது.!!

சென்னை 24 செப்டம்பர் 2023 வைஜயந்தி என்டர்டெயின் மென்ட்ஸின் வலைத்தளப் பிரிவான ஏர்லி மான்சூன் டேல்ஸ் தயாரிப்பில் கோம்தேஷ் உபாத்யே இயக்கத்தில், உருவான  ஏழு எபிசொடுகளுடனான  இந்தத் தொடரில்  நித்யா மேனனுடன்  நிருபம் பரிதாலா, கௌதமி, திருவீர், தல்லூரி ராமேஸ்வரி, நரேஷ் மற்றும் முரளி மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

இந்தியாவிலும், உலகெங்கிலும்  240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் குமாரி ஸ்ரீமதி இன் அனைத்து ஏழு எபிசோடுகளையும் தெலுங்கிலும் மற்றும்  ஹிந்தி, தமிழ், மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்ட  பதிப்புக்களை செப்டம்பர் 28 முதல் ஸ்ட்ரீம் செய்து கண்டு மகிழலாம் 

மும்பை, இந்தியா24  செப்டம்பர், 2023— இந்தியாவின் மிகவும் அதிகளவில்  விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளமான பிரைம் வீடியோ,  அடுத்து வெளியிடவிருக்கும் விலா எலும்புகளை நோகச்செய்யும் நகைச்சுவை நிரம்பிய  உணர்ச்சிகாரமான    தெலுங்கு தொடர், குமாரி ஸ்ரீமதி  இன் டிரைலரை இன்று வெளியிட்டது. கோம்தேஷ் உபாத்யே(Gomtesh Upadhye)  இயக்கத்தில் உருவான  இந்தத் தொடரில்  நித்யாமேனன் ( Nithya Menen) நடிக்க  அவருடன் இணைந்து நிருபம் (Nirupam),கௌதமி (Gautami) திருவீர் (Thiruveer) தல்லூரி ராமேஸ்வரி (Talluri Rameshwari, நரேஷ் ( Naresh)  மற்றும்  முரளி மோகன்(Murali Mohan)  ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். 50 ஆண்டுகால பாரம்பரியப் பிண்ணனி கொண்ட வைஜயந்தி என்டர்டெயின்மென்ட் இன்  வலைத்தளப் பிரிவான ஏர்லி மான்சூன் டேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ஏழு எபிசோடுகளைக் கொண்ட இந்தத் தெலுங்குத்  தொடர் ,  ஹிந்தி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில்  டப் செய்யப்பட்ட பதிப்புக்களுடன் செப்டம்பர்  28 முதல் பிரைம் வீடியோவில்  பிரத்யேகமாக திரையிடப்படும். குமாரி ஸ்ரீமதி  தொடர்  பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்திய சேர்க்கையாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒரு உறுப்பினருக்கான தொகையாக ஆண்டுக்கு வெறும் ₹1499  செலுத்தி,  சேமிப்பு, வசதி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை  அனுபவித்து மகிழலாம் .

குமாரி ஸ்ரீமதி தொடரின்  இந்த ட்ரெய்லர், 30 வயது நிரம்பிய ஸ்ரீமதி (மேனன்) என்ற தனியொரு பெண் மற்றும் செயலிழந்து முடங்கிப்போன அவளது  குடும்பத்தின் வாழ்க்கைப் பாதைக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. கிழக்கு கோதாவரியில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தை பின்புலமாகக் கொண்ட இந்த கதையில், மன உறுதியோடு விளங்கும் தனித்திருக்கும் ,ஒரு  பெண்ணான ஸ்ரீமதி, தனது மூதாதையர் வீட்டை மீட்டெடுக்கும் முயற்சியில்  தனது கிராமத்தில் ஒரு மதுபான விடுதி  மற்றும் உணவகத்தைத் திறக்க முடிவு செய்கிறாள். அந்த முயற்சியின்    பாதையில் கடந்து செல்லும்  ஸ்ரீமதி எதிர்கொள்ளும்  பல்வேறு சமூக மற்றும் தார்மீக தடைகள் தொடர்ச்சியாக பல உவப்பான நகைச்சுவை நிகழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது. .

 “குமாரி ஸ்ரீமதி கதாபாத்திரம் எனக்கு எப்போதுமே தனித்துவமாக சிறப்பு மிக்க ஒன்றாக விளங்கும். என் வாழ்க்கையில்  என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு பகுதியிலிருந்து பல விஷயங்களை எனக்கு எடுத்துரைத்து  என்னை உணரவைத்தது. இந்தத் தொடரின் ஒவ்வொரு கதாபாத்திரமும் நான் ஏற்கனவே அறிந்த ஒருவரின் மறுவடிவமாகவே தோன்றியது.  . அவர்களிடையே – ஒரு போராளியாக , ஆனால் தனக்கே உரிய பாதிப்புக்குள்ளாகும் தன்மையோடு,  ஆணவமிக்கவளாக, ஆனால் அதே சமயம் கனிவான இதயம் படைத்தவளாக, அன்பானவளாக , ஆனால் பயத்துடன் விளங்கும் இந்த குமாரி கதாபாத்திரம்  என் மனதுக்கு உகந்த மிகவும் பிடித்தமானவளாவாள் . நாட்டின் தலை சிறந்த நடிகை ஒருவர் திரையில் அவரை அப்படியே  உயிர்ப்புடன்   வெளிப்படுத்தியதை காணும் எழுத்தாளருக்கு அது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக திரையில் நாம் பார்த்திராத,  தெலுங்கு பேசும் மாநிலங்களின்  ஒரு பகுதியை, இப்போது நாம் காணுகிறோம்  என்று நினைக்கிறேன். இதை  பிரைம் வீடியோவில்  உங்களிடம் கொண்டு வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று திரைக்கதை, வசனகர்த்தா மற்றும் படைப்பாளி ஸ்ரீநிவாஸ் அவசர்லா கூறினார்.

இந்தத் தொடர் குறித்த தனது கருத்தைத் தெரிவித்த  பற்றி இயக்குநர் கோம்தேஷ் உபாத்யே கூறினார் , “குமாரி ஸ்ரீமதி ஐ  உலகம் முழுவதிலுமுள்ள  பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அனைவரும் தங்களை தொடர்பு படுத்திக் கண்டு ரசித்து அனுபவிக்கும் வகையிலான பாத்திரப்படைப்புக்கள்  மற்றும் நிகழ்வுகளை காட்சிப்படுத்தும் இந்தத் தொடர் நகைச்சுவை மற்றும் உணர்வுகளின் ஒரு துல்லியமான கலவையாக விளங்குகிறது. ஒரு  வழக்கமான  குடும்பப்பின்னணியில் புனையப்பட்ட  அதன் புத்துணர்ச்சியூட்டும் கதைக்களத்துடனான,   குமாரி ஸ்ரீமதி  அனைத்துத் தரப்பு  பார்வையாளர்களை ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம். பிரைம் வீடியோவுடனான  கூட்டாண்மை மூலம்  பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு அவர்களுக்கு  விருப்பமான மொழியில் தொடரை வழங்குவதற்கான எங்களின் வீச்சளவை நீட்டிக்க முடிந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறோம்.

இந்தத் தொடரை அனைத்து பார்வையாளர்களும் கண்டு ரசித்து மகிழ்வதைக் காண   நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம். 

 “சமூகக் கட்டமைப்பு  மற்றும் ஸ்டீரியோடைப்களின் கட்டுப்பாட்டை மீறி செயல்படும்  ஒரு இலட்சியப் பெண்ணின் கதாபாத்திரத்தில்  நடிக்க  நான் எப்போதும் ஆவலோடு காத்திருந்திருக்கிறேன். . 

ஸ்ரீமதியின் பாத்திரப்படைப்பை கண்டபோது ஒரு சுகந்த காற்றை சுவாசிப்பதுபோல  உணர்ந்தேன். ஆண் ஆதிக்கம் நிறைந்த  பணியிடத்தில்  ஒரு பெண்ணின் பயணத்தை சித்தரிக்கும்  எளிய மற்றும் தாக்கத்தை விளைவிக்கக் கூடிய  இந்த கதை சொல்லும் அணுகுமுறை புதிய மற்றும் நுண்ணறிவுத்திறனுடனான  கண்ணோட்டங்களை ஒரு நடிகராக எனக்கு வழங்கியது. உள்ளூர் கதைகள் மற்றும் கலைஞர்கள் உலகளாவிய அங்கீகாரத்தை  பெற தனது  ஸ்ட்ரீமிங் சேவையின் மூலமாக ப்ரைம் வீடியோ உதவி வருகிறது. ப்ரீத்: இன்டூ த ஷேடோஸ் மற்றும் மாடர்ன் லவ் ஹைதராபாத் படைப்புகள் மூலம் பிராண்டுடன் முன்பு என்னை இணைத்துக் கொண்ட பிறகு, இப்போது ஒரு  அசாதாரண வியக்கத்தக்க  கதையுடன் மீண்டும் என்னை  இணைத்துக் கொள்ளுவதில் நான் மிக்க  மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆண்வழி மரபுகளை  எதிர்த்துப் போராடும் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்தக் கதையுடனான தங்கள் தொடர்பை உணருவார்கள் என்று நான் நம்புகிறேன், ”என்று முன்னணி நடிகை நித்யா மேனன் கூறினார்.

 “குமரி ஸ்ரீமதி ஒரே மாதிரியான கட்டுக்கதைகளை தகர்த்தெறிந்து தங்களின் கனவு இலக்குகளை அடைந்து வெற்றிகாணத் துடிக்கும்  இன்றைய பெண்கள்   பலருடன் ஒத்திசைந்து இயங்குகிறார்  -. இது எனக்கு ஸ்ரீமதியுடனான  மூன்று வருட பயணம்,  மற்றும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவள், ”என்று தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் கூறினார்.

error: Content is protected !!