கூச முனுசாமி வீரப்பன் டாக்குமெண்ட்ரி வெப் சீரிஸ் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.75 /5.

நடிகர் & நடிகைகள் :- “நக்கீரன்” கோபால், சீமான், என்.ராம், பா.பா.மோகன், சுப்பு என்ற சுப்ரமணியன், கூஸ் முனிசாமி வீரப்பன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், ரோகிணி, ஜீவா தங்கவேல், மோகன் குமார், தமயந்தி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஷரத் ஜோதி.

ஒளிப்பதிவாளர் :- ராஜ்குமார் பி.எம்.

படத்தொகுப்பாளர் :- ராம் பாண்டியன்.

இசையமைப்பாளர் :- சதீஷ் ரகுநாதன்.

தயாரிப்பு நிறுவனம் :- தீரன் ப்ரொடக்‌ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- பிரபாவதி ஆர்.வி. ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன.

ரேட்டிங் :- 3.75 /5.

ஜீ5 நிறுவனம் தொடர்ச்சியாகத் தமிழில் நல்ல நல்ல வெப்சீரிஸ்களை தயாரிப்பதும், பல நல்ல வெப்சீரியஸ்களையும் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது புதிய கிரைம் டாக்குமெண்டரி சீரிஸ் ஒன்றை அறிவித்துள்ளனர்.

இந்த டாக்குமெண்டரி சீரிஸில் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை பற்றி மிகத் தெளிவாகவும் அருமையாகவும் உருவாக்கி இருக்கிறார்கள்.

1990 முதல் 2004 வரை பல வருடங்களாக பலர் சந்தன கடத்தல் வீரப்பனை ப்பற்றி பல பேர் பலவிதமாகவும் சிலர் விதமாகவும் கர்நாடகா கவர்மெண்ட் தமிழ் நாடு கவர்மெண்ட் அனைவரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கதைகளை அடுக்கிக் கொண்டே போனதை நாம் தமிழக மக்களாகிய நாம் அனைவரும் கேட்டிருப்போம் என் பார்த்திருப்போம்.

ஆனால், தமிழ்நாடு மற்றும் கர்நாடக காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் தனது வாழ்க்கையில் நடந்தது என்ன என்பதை தானே வீடியோ மூலம் சந்தன கடத்தல் வீரப்பன் பேசி இருப்பது தான் தொடராக இந்த கூச முனிசாமி வீரப்பன் டாக்குமெண்ட்ரி வெப் சீரியஸ் 14ஆம் தேதி ஜீ 5 ஓ டி டி தளத்தில் வெளியாகிறது.

இதுவரை பார்த்த சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வரலாறு பற்றிய சில திரைப்படங்கள் தொலைக்காட்சி தொடர்கள் இணையத் தொடர்கள் அனைத்துமே நக்கீரன் மற்றும் தின பத்திரிகைகளில் வெளியான செய்திகள், பேட்டிகள் மற்றும் காவல்துறையினர் தெரிவித்த தகவல்களை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டவை.

ஆனால், இந்த டாக்குமெண்ட்ரி வெப் சீரியஸ் 1996ஆம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் அவர்கள் நக்கீரன் கோபால் அவர்கள் மூலமாக நேரடியாக தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதோடு, அந்த நேர்காணல் வீடியோவின்  சில பகுதிகளையும், ஒரு சில சம்பவங்களை மட்டும் நடிகர்கள் வைத்து படப்பிடிப்பு நடத்தி இத்துடன் இணைத்துள்ளார்கள்.

சந்தன கடத்தல் வீரப்பனை முதல் முதலாக சந்தித்து நேர்காணல் செய்த பத்திரிகையாளர்கள், அவரால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தமிழக மற்றும் கர்நாடகா காவல்துறையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துகளும் இதில் காவல்துறைகளால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்கள் பலருடைய நேர்காணல் அனைத்தும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

தான் செய்த கொலைகள் பற்றியும், அந்த கொலைகளை ஏன் செய்தேன் எதற்காக செய்தேன்? என்பதையும் சந்தனக் கடத்தல் வீரப்பன் நேர்காணலில் பேசி இருக்கும் பகுதிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் ஜெயலிதா மற்றும் டாக்டர் ராமதாஸ் பற்றியும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியலுக்கு வருவது பற்றியும் வராமல் இருப்பது பற்றியும் அரசியல் பற்றியும் பேசியிருப்பது மற்றும் அவருடைய பேச்சு பாணி அதிர வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இந்த டாக்குமெண்ட்ரி வெப் சீரியஸ் இந்த காட்சிகளை தமிழ் திரைப்பட உலகில் உள்ள பெரிய நடிகர்களை வைத்து திரைப்படமாக்கி இருந்தால் கூட இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருக்குமா என்றால் கண்டிப்பாக கிடைத்திருக்காது.

சந்தன கடத்தல் வீரப்பன் பேசிய அந்த வீடியோ தொகுப்பை அப்படியே இணைத்திருப்பது டாக்குமென்ட்ரி வெப் தொடருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

ஆறு எபிசோட் ஆக கொண்ட இந்த டாக்குமென்ட்ரி வெப் சீரிஸ் வழக்கம்போல் உருவாக்கப்பட்டிருந்தாலும், அந்த உணர்வே ஏற்படாத வகையில், மிக விறுவிறுப்பான அற்புதமாகவும் த்ரில்லர் சீரிஸ் பார்க்கும் அனுபவத்தை கொடுத்திருப்பது இந்த டாக்குமென்ட்ரி வெப் சீரிஸ் மிக பெரிய தனி சிறப்பு.

இந்த கூச முனுசாமி வீரப்பன்
டாக்குமென்ட்ரி வெப் சீரிஸில் சந்தன கடத்தல் வீரப்பனை முதல் முதலாக பேட்டி எடுத்த பத்திரிகையாளர்கள், நக்கீரன் ஆசியர் கோபால், சீமான் போன்றவர்கள் வீரப்பனுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்.

முன்னாள் காவல்துறை உயர் அதிகாரியான அலெக்ஸாண்டர் எப்படி இருந்தாலும் சந்தனக் கடத்தல் வீரப்பன் ஒரு கொடூரமான குற்றவாளி என தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அதே நேரத்தில், வீரப்பனால் இறந்த காவல்துறையை சேர்ந்த மகள், ”என்னதான் இருந்தாலும், யாரையும் கொலை செய்திருக்க கூடாது” என்று சொல்வதும், என்னுடைய அப்பா செய்த தவறால் பச்சிளம் குழந்தையாக இருக்கும் போதே தனது தந்தையை இழந்த அந்த பெண்ணிடம்  வீரப்பன் மகள் வித்யா வீரப்பன் மன்னிப்பு கேட்கும் இடங்களில் கலங்க வைத்து விட்டார்கள்.

இசையமைப்பாளர் சதிஷ் ரகுநாதனின் பின்னணி இசை, அனைத்தும் அருமை.

ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் .பி.என்-னின் ஒளிப்பதிவு இந்த டாக்குமெண்டரி வெப் சீரிஸ்க்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.

படத்தொகுப்பாளர் ராம் பாண்டியனின் படத்தொகுப்பு தொடருக்கு மிகப்பெரிய பலம்.

குறிப்பாக படத்தொகுப்பாளர் ராம் பாண்டியன் காட்சிகளை தொகுத்த விதம் டாக்குமெண்டரி வெப் சீரிஸ்க்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.

அவரைச் சார்ந்தவர்கள், மட்டுமல்லாமல் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காவல்துறையினர் சொல்லும் பதில்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சந்தன கடத்தல் வீரப்பன் என்ற சாதாரண மனிதர் இத்தகைய குற்றவாளியாக உருவெடுக்க காரணம் தமிழக காவல்துறை அதிகாரிகள்தான் என்பதை சாட்டையடியாக சொல்லியிருக்கிறார்கள்.

மொத்தத்தில், கூச முனுசாமி வீரப்பன் டாக்குமெண்டரி வெப் சீரிஸில் உண்மையை உரக்க கூறியிருக்கிறார்கள்.

error: Content is protected !!