நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சலார் பார்ட் 1- சீஸ்ஃபயர் திரைப்படம் உலகளவில் மொத்தம் 402 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது !!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சலார் பார்ட் 1- சீஸ்ஃபயர் திரைப்படம் உலகளவில் மொத்தம் 402 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது !!மேலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலுடன் இப்படத்திற்கான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும் ‘டிக்கெட் விண்டோ’விலும் தொடர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்தத் திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் தனது இடத்தை மிகப்பெரிய வித்தியாசத்துடன் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த திரைப்படம் வார இறுதியில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 402 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
இத் திரைப்படத்தின் வசூல் ஒவ்வொரு நாளும் மேல்நோக்கி செல்வதை காட்டுகிறது.
அத்துடன் இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் செய்யும் என்பதையும் உறுதி செய்கிறது.
இந்தத் திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்திருக்கிறது.
அத்துடன் இந்த ஆண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு படைப்புகளை பார்வையிடும் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய படைப்பின் சான்றாகவும் திகழ்கிறது.
இந்தத் திரைப்படம்… ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமின்றி… படத்தில் இடம்பெற்ற தொழில்நுட்பம் மற்றும் காட்சி அமைப்பு குறித்தும், பிரசாந்த் நீல்- பிரபாஸ் கூட்டணியின் கடுமையான உழைப்பு குறித்தும் விமர்சர்களிடமிருந்தும் ஏகோபித்த அன்பையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது.
‘சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்’ திரைப்படம் தற்போது உலக அளவில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றுள்ள நிலையில்.. ‘சலார் பார்ட் 2- சௌரியங்க பர்வம்’ படத்தின் தொடர்ச்சிக்கான களத்தையும் அமைத்துள்ளது.
கான்சாரின் வாழ்க்கையை… மிகப் பெரிய ஆக்சன் நிறைந்த உலகத்தை… பிரசாந்த் நீல் தன்னுடைய படைப்பில் வழங்கிய விதம்… அனைத்து தரப்பினரிடமிருந்தும் மிகப்பெரிய அளவில் அன்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘சலார் பார்ட் 1 -சீஸ்ஃபயரி’ல் பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Related posts:
நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!!
நடிகர் ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் இந்தியில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.!
“சலார்: பார்ட் 1 சீஸ்ஃபயர்” படத்தின் டிரெய்லர், அதிரடி ஆக்சன் அதகளத்துடன் வெளியானது !!
சலார் திரைப்படம் மிகவும் உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும் சலார்: பார்ட் 1: சீஸ் ஃபயர் படம் குறித்து பான் இந்தியன் ஸ்டார் பிரபாஸ்!!
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து உலக அளவில் சாதனை படைத்திருக்கிறது!
ஷாருக்கானின் ‘ஜவான்’ பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து உலகம் முழுவதும் 574.89 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.!!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளி வந்த ‘ஆதி புருஷ்’ திரைப்படம் வசூலில் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறது!!
சலார் பார்ட் 1′ சீஸ்ஃபயர் படத்தின் முதல் சிங்கிள் “சூரியன் குடையா நீட்டி”பாடல் வெளியாகியுள்ளது!!
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும், “சலார்” படத்தின் டீசர் ஜூலை 6 வெளியாகிறது !!
உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’!!

