‘சேத்துமான்’ திரைப்படப்புகழ் தமிழ் இயக்கும் ‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது !!
‘
சேத்துமான்’ திரைப்படப்புகழ் தமிழ் இயக்கும் ‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது !!
சேத்துமான்’ திரைப்படப்புகழ் தமிழ் இயக்கும் ‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது !!சென்னை 17 ஜனவரி 2024 சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, எஸ்.வினோத் குமார் வழங்கும், ‘சேத்துமான்’ படப்புகழ் தமிழ் இயக்கும் ‘கனா’ புகழ் தர்ஷன் ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
‘சேத்துமான்’ என்ற இயல்பான திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இயக்குநர் தமிழ்.
இப்போது அவர் பெருமாள் முருகன் கதை வசனத்தில் செ. வினோத்குமார் தயாரிப்பில் தனது மூன்றாவது திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

லவ் ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ளது.
“நம் நாட்டில் எங்கும் அரசியல் எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி ,சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது.
இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமரிசையாக சித்தரிக்கும் திரைப்படம் இது” என்கிறார் இயக்குநர் தமிழ்.
‘ஹிருதயம்’, ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படப்புகழ் தர்ஷனா ராஜேந்திரன், ‘கனா’ புகழ் தர்ஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் நடிகர்கள் ஆதிரா, ஆதித்யா கதிர் மற்றும் பல புதுமுக நடிகர்களும் நடித்துள்ளனர்.
இரவு- பகல் என ஒரேக்கட்டத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
படப்பிடிப்பு மைசூர், பெங்களூர், மாதேஸ்வரன் மலைப்பகுதிகள், தர்மபுரி, மேட்டூர் ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெற்றது.
திரைப்படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்திருக்க, பிந்துமாலினி- வேதாந்த் பரத்வாஜ் இசையமைத்துள்ளனர்.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்.
தொழில்நுட்பக் குழு விவரம்:
திரைக்கதை & இயக்கம் : தமிழ்,
கதை & வசனம் : பெருமாள் முருகன்
தயாரிப்பு : செ. வினோத்குமார்,
ஒளிப்பதிவு : தீபக்,
இசை: பிந்துமாலினி- வேதாந்த் பரத்வாஜ்,
படத்தொகுப்பு : கண்ணன்,
கலை வடிவமைப்பு : பி. ஜெயமுருகன்
ஒலிப்பதிவு : அந்தோனி பி. ஜெ. ரூபன்,
சண்டைப்பயிற்சி : பில்லா ஜெகன்,
உடை வடிவமைப்பு : ஈகா பிரவீன்,
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: திவாகர். ஜெ,
விளம்பர வடிவமைப்பு : சிவா
மக்கள் தொடர்பாளர் : சுரேஷ் சந்திரா,
நிறுவனத்தின் பெயர் : சினிமாக்காரன்
நிறுவனத்தின் பெயர் : சினிமாக்காரன்
Related posts:
‘சேத்துமான்’ திரைப்படப்புகழ் தமிழ் இயக்கும் ‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் தொடங்கியது!!
J.N. சினிமாஸ் தயாரிப்பில் ‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது
டிக்கிலோனா’ புகழ் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ’வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.!!
பிக்பாஸ் புகழ் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்?
காவல்துறை அதிகாரியாக. ‘ நட்டி’ நடராஜ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமாகியது
நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.!
‘கூழாங்கல்’ புகழ் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி-அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.!!
நினைவில் நீங்கா, நகைச்சுவை நாயகர் “விவேக்” அவர்களுக்கான அஞ்சலியுடன், நடிகர் உதயநிதி நடிக்கும், “ஆர்ட்டிகள் 15” படத்தின் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பு !!!
நடிகர் உறியடி விஜயகுமார் நடிக்கும் 62 நாட்கள் நடைபெற்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!!!
நடிகர் மொட்டை ராஜேந்திரன் பப்ஜி வீரராக நடிக்கும் பப்ஜி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

