சர்வதேச அங்கீகாரம் பெறப் போகும் சண்டை பயிற்சி இயக்குனர் ‘அனல் அரசு’!
சர்வதேச அங்கீகாரம் பெறப் போகும் சண்டை பயிற்சி இயக்குனர் ‘அனல் அரசு’!இவர் ஏற்கனவே பணியாற்றிய திரைப்படங்களுக்காக தமிழ்நாடு மாநில அரசு விருது, ஆனந்த விகடன் விருது, விஜய் டிவியின் விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது(SIIMA)விருது,V4 எம்.ஜி.ஆர்- சிவாஜி அகாடமி விருது, தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க விருது,நார்வே தமிழ் திரைப்பட விழா விருது, சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது போன்ற விருதுகளையும் சண்டைப்பயிற்சி இயக்குனராக சிறப்பாக பணியாற்றியதற்காக பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் ‘பாலிவுட் பாட்ஷா’ என்றழைக்கப்படும் ‘ஷாருக்கான்’ நடிப்பில், ‘அட்லி’ இயக்கத்தில், ‘அனிருத்’ இசையில்,’அனல்’அரசு அவர்கள் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1400 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. இத்திரைப்படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குனராக சிறப்பாக பணியாற்றியதற்கு பல்வேறு தளங்களிலும் இவருக்கு அங்கீகாரங்கள் கிடைத்து, அதற்கான விருதுகளையும் வென்றிருக்கிறார்.
இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள அவர் இன்று அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்திற்கு புறப்படுகிறார்.
மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது,”ஜவான் திரைப்படத்தை ஒரு இந்தி திரைப்படமாக பார்க்காமல், இந்திய திரைப்படமாகத்தான் நான் பார்க்கிறேன்.அது தேர்வாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்த விருது விலை மதிப்பற்ற தலைசிறந்த ஒன்றாகும்.
Related posts:
சண்டை பயிற்சிக்கான சர்வதேச விருதுக்கான பட்டியலில் ‘அனல்’அரசு பணியாற்றிய ‘ஜவான்’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது!
ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் இணைந்த சர்வதேச சண்டை பயிற்சி இயக்குநர்கள் ஆக்சன் காட்சிகளில் பணியாற்றியுள்ளனர்!!
சண்டைப் பயிற்சி இயக்குனர் அனல் அரசு பீனிக்ஸ் (வீழான்) திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார்!!
இந்தியன் 2′ – 90 வயது தாத்தாவிற்கு சண்டை பயிற்சி
அஜித் விஜய் ஒரே படத்தில் இயக்க ஆசைப்படும் பாகுபலி சண்டை பயிற்சி கலைஞர்
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக திரைப்பட நடிகர் திரு. ராஜேஷ் நியமனம் தமிழகஅரசு அறிவிப்பு!
மகாராஷ்டிராவில் 22வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் சீனுராமசாமியின் இடிமுழக்கம் திரைப்படம் திரையிடப்பட்டது
உலகளவில் தமிழருக்கு கிடைத்த உயர்ந்த அங்கீகாரம். சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக தமிழர் ஹரிஹர அருண் சோமசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார் !
சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’!
சர்வதேச விருதுகளை அள்ளி குவித்த சின்னஞ்சிறு கிளியே திரைப்படம்

