மழை பிடிக்காத மனிதன் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள்:- விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சத்யராஜ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், தாலி தனஞ்செயா, சுரேந்தர் தக்கூர், முரளி சர்மா, பிருத்துவி அம்பார், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- S.D. விஜய் மில்டன்.
ஒளிப்பதிவாளர் :- S.D. விஜய் மில்டன்.
படத்தொகுப்பாளர் :- K.L.பிரவீன்.
இசையமைப்பாளர் :- விஜய் ஆண்டனி, அச்சு-ராஜாமணி.
தயாரிப்பு நிறுவனம்:- இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- கமல் போஹ்ரா, D.லலிதா, B.பிரதிப்
பங்கஜ் போஹ்ரா.
ரேட்டிங் :- 2./5.
இந்திய ராணுவத்தில் உள்ள ரகசிய பிரிவில் பணியாற்றி வரும் கதாநாயகன் விஜய் ஆண்டனி, அவரை கொலை செய்ய துரத்தும் எதிரியின் தாக்குதலில் தனது மனைவி கதாநாயகன் விஜய் ஆண்டனி, இறந்து விட்டார் என் எதிரிகளால் நம்பப்படுகிறது.
கதாநாயகன் விஜய் ஆண்டனி உயிருக்கு போராடும் அவரை சரத்குமார், காப்பாற்றி மீண்டும் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதி, இறந்த கதாநாயகன் விஜய் ஆண்டனி, இறந்ததாகவே இருக்கட்டும் என்று நினைத்து, அவரை யாருக்கும் தெரியாமல் அந்தமானுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார்.
புதியதாக அந்தமானுக்கு வரும் கதாநாயகன் விஜய் ஆண்டனிக்கு புதிய உறவுகள் கிடைக்க, அவர்கள் மூலம் புதியதாக ஒரு பிரச்சனைகளும் வருகிறது.
அந்த பிரச்சனைகளில் இருந்து கதாநாயகன் விஜய் ஆண்டனி, விடுபட்டாரா?, அல்லது அந்த பிரச்சனையிலிருந்து விடுபட வில்லையா?, அவரை தேடும் எதிரிகளிடம் பிடிபட்டாரா? எதிரிகளிடம் பிடிப்படவில்லையா? என்பதுதான் இந்த ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார்.
கதாநாயகன் விஜய் ஆண்டனி, ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டி மிரட்டி இருக்கிறார்.
இந்த ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷுக்கு கதாநாயகன் ஜோடியாக இல்லை என்பது அவரை மட்டும் அல்ல ரசிகர்களையும் கோவம் அடைய வைத்து விட்டது.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டாலி தனன்ஜெயா, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முரளி சர்மா ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் புரட்சித் தமிழன் சத்யராஜ் ஆகியோரின் அனுபவமான நடிப்பை கொடுத்து திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கதையோட்டத்திற்கு பெரிதாக பயன்பட்டிருக்கிறார்கள்.
படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல்-இன் படத்தொகுப்பு மூலம் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் எஸ் டி விஜய் மில்டனின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி மற்றும் அச்சு-ராஜாமணி ஆகியோரின் இசையில் பாடல்கள் பின்னணி இசை பல திரைப்படங்களின் சாயல் தெரிகிறது.
ஒளிப்பதிவு மற்றும் எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் எஸ்.டி.விஜய் மில்டன், கதாநாயகன் விஜய் ஆண்டனியை அதிரடி ஆக்ஷன் கதாநாயகனாக மட்டும் இன்றி காதல் நாயகனாகவும் காட்ட முயற்சி செய்திருக்கிறார்.
அதில் காதல் ரொம்ப கஷ்ட்டம் என்பதை புரிந்துக்கொண்டு தான் மற்றொரு கதாபாத்திரத்தை காதலுக்கு பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் கதாநாயகன் விஜய் ஆண்டனியை ஆக்ஷன் கதாநாயகனாக மட்டுமே காண்பித்திருக்கிறார்.
இயக்குநர் விஜய் மில்டன், ”கெட்டவன கொல்ல கூடாது, கெட்டத தான் அழிக்கணும்” என்ற மெசஜோடு திரைப்படத்தை முடிக்காமல் அடுத்த பாகத்திற்கு அடித்தளம் அமைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் அதிகளவில் ரசிகர்களை கவரவில்லை என்பதுதான் உண்மை.











