சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன், இணையும், “L2: எம்புரான்” பட டீஸர் வெளியீடு!!
சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன், இணையும், “L2: எம்புரான்” பட டீஸர் வெளியீடு!!சென்னை 27 ஜனவரி 2025 தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ், மிகவும் எதிர்பார்க்கப்படும் “L2E எம்புரான்” திரைப்படம் மூலம், மலையாளத் திரையுலகில் கால் பதித்துள்ளது.
பெரும் வெற்றிப் படங்களான லூசிஃபர் மற்றும் ப்ரோ டாடிக்குப் பிறகு, இயக்குநர் மற்றும் நடிகராக அவர்களின் கூட்டணியில், உருவாகியுள்ள மூன்றாவது படம் என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
2019 ல் வெளியான லூசிஃபர் படம், இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து, பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
இந்நிகழ்வில் மெகாஸ்டார் மம்முட்டி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார், மேலும் படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
https://youtu.be/AYzSvao5RbQ
டீஸர் வடக்கு ஈராக்கில் கைவிடப்பட்ட நகரமான “காரகோஷ்” என்ற இடத்தில் துவங்குகிறது.
அரசியல் மற்றும் கூலிப்படைகளின் உலகத்தில் நிலவும் அதிகாரம், துரோகம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை இப்படம் ஆராய்கிறது.
சுபாஸ்கரன் அவர்களால் துவங்கப்பட்டு, ஜி.கே.எம். தமிழ் குமரன் அவர்களால் தலைமையேற்று வழிநடத்தப்படும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், பெரிய பட்ஜெட் மற்றும் சிறந்த உள்ளடக்கம் சார்ந்த படங்களை வழங்குவதில், பெயர் பெற்ற ஒரு சிறந்த தயாரிப்பு நிறுவனமாகும். மலையாள திரையுலகில் அறிமுகமாகும் விதமாக, லைகா புரொடக்ஷன்ஸ், பிரபல தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரின் ஆசீர்வாத் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து, “L2: எம்புரான்” படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், இந்திரஜித் சுகுமாரன், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய் குமார் மற்றும் பைஜு சந்தோஷ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
L2E: எம்புரான் படத்தை முரளி கோபி எழுதியுள்ளார், தீபக் தேவ் இசையமைத்துள்ளார் மற்றும் சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு வடிவமைப்பை கையாண்டுள்ளது, மோகன்தாஸ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
L2E: எம்புரான் திரைப்படம், மார்ச் 27, 2025 அன்று மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ளது
Related posts:
லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், எம்புரான்’ (லூசிபர் 2) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!
எம்புரான்’ (லூசிபர் 2) திரைப்படம் மூலம் மலையாள திரைஉலகில் அடியெடுத்து வைக்கும் சுபாஸ்கரனின் “லைக்கா நிறுவனம்”!!
லூசிபர் 2 எம்புரான்’ திரைப்படத்தின் நட்சத்திர இயக்குநருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த லைக்கா சுபாஸ்கரன்
லைகா நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீடு!!!
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்திருக்கும் ‘தி கோட் லைஃப்’ படத்தின் ‘பிகினிங் லுக்’ போஸ்டரை சூப்பர்ஸ்டார் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்!!
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது!
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ இந்தத் படத்தை ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ உடன் ஒப்பிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டினார்!
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ புக் மை ஷோ (Book My Show) தளத்தில் ரசிகர்களின் ஆர்வத்தையும் வரவேற்பையும் பிரதிபலிக்கிறது !!
லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் வடிவேலு – பி வாசு இணையும் ‘சந்திரமுகி 2’!
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ஜெய் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் – நடிகை ஷிவதா இணையும் ‘தீராக் காதல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!!

