தமிழ் திரையுலக பிரபலங்கள்  வெளியிட்ட இயக்குநர் L R  சுந்தரபாண்டி இயக்கத்தில், “4த் ஃப்ளோர்”  திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!

தமிழ் திரையுலக பிரபலங்கள்  வெளியிட்ட இயக்குநர் L R  சுந்தரபாண்டி இயக்கத்தில், “4த் ஃப்ளோர்”  திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!

சென்னை 13 ஏப்ரல் 2025 மனோ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R  சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும், பரபர திரில்லர் திரைப்படம் “4த் ஃப்ளோர்”.

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாக, தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ஆகியோர் இந்த திரைப்படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளனர்.

நடிகர் ஆரி அர்ஜுனனின் நடிப்பில் வித்தியாசமான கதை களத்தில் அதிரடியாக வெளியாகியிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இந்த “4த் ஃப்ளோர்” திரைப்படத்தின் கதை.

அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில்,  இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் L R  சுந்தரபாண்டி.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார்.
தீப்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு “போடா போடி” படப்புகழ் இசையமைப்பாளர் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், “போடா போடி” வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார்.

சாமி 2, பென்குயின், படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் திவ்யா இப்படத்திற்கு காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில் நுட்ப குழு விபரம்
இயக்குநர்: L R சுந்தரபாண்டி
தயாரிப்பாளர்: A.ராஜா
நிர்வாக தயாரிப்பாளர்: சூரிய பிரகாஷ் P
ஒளிப்பதிவு : J லக்ஷ்மன்
இசையமைப்பாளர்: தரண் குமார்
பாடலாசிரியர் : கு கார்த்திக்
எடிட்டர்: ராம் சுதர்ஷன்
கலை: சுரேஷ் கல்லேரி
நடனம் : அபு சால்ஸ்
ஸ்டண்ட்: டேஞ்சர் மணி
மக்கள் தொடர்பு : A ராஜா

error: Content is protected !!