நடிகர் அப்புக்குட்டி வருடம் தோறும் இன்று தனது பிறந்த நாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடி வருகிறார் !
நடிகர் அப்புக்குட்டி வருடம் தோறும் இன்று தனது பிறந்த நாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடி வருகிறார் !
சென்னை 07 மே 2025 இன்று வழக்கம்போல் தனது பிறந்த நாளை முதியோர் இல்லத்தில் உணவளித்தும், நண்பர்களோடு மகிழ்ந்தும் கொண்டாடுகிறார்.
நடிகர் அப்புக்குட்டியின் திரைப்பயணம் கதையின் நாயகனாக ‘அழகர்சாமியின் குதிரை’யில் ஏறி, தனது நடிப்பு திறமையால் டெல்லி சென்று, தேசிய விருது வாங்கிய நடிகர் அப்புக்குட்டி. தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து தமிழ் திரைப்பட உலகில் தனக்கென ஒர் தனி இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ஜீவகாருண்யம்’, ‘வாழ்க விவசாயி’ இரண்டு திரைப்படங்களும் வெளிவர தயாராக உள்ளது.
கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், குணச்சித்திர கதாபாத்திரங்கள், காமெடி கதாபாத்திரங்கள் என ‘ஐ அம் வெயிட்டிங்”, ‘அரி கொம்பன்’, ‘ ஆ கன்னியப்பன்’, ‘பிரம்ம முகூர்த்தம்’ ‘பயமறியான்’, ‘சாயா வனம்’ போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.











