நடிகர்கள் சமுத்திரக்கனி, பரத் நடித்த “வீரவணக்கம்” திரைப்படம் ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !

நடிகர்கள் சமுத்திரக்கனி, பரத் நடித்த “வீரவணக்கம்” திரைப்படம் ஆகஸ்ட் 29ஆம் தேதி  உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !

சென்னை 16 ஆகஸ்ட் 2025 பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கி சமுத்திரக்கனி மற்றும் பரத் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் “வீரவணக்கம்” .

புரட்சிகரமான சமூக கருத்துக்களை கொண்ட இந்தபடம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.

சம காலத்தில் நடைபெறும் சமூக அவலங்களும், கடந்த காலத்தில் நடந்த புரட்சிகளும் இந்த கதையில் முக்கியமான ஒரு கருத்தை நமக்கு உணர்த்தும் வண்ணம் படமாக்கப்பட்டிருக்கிறது .

சமீபத்தில் இத்திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சி திரையிடப்பட்டது.

அதில் பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தேசிய விருது பெற்ற நடிகை சுரபி லக்‌ஷ்மி நடித்திருக்கிறார்.

என்கிறார் படத்தின் இயக்குனர் அனில் வி. நாகேந்திரன்.

error: Content is protected !!