டிரான்: ஏரஸ்’ படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ் பற்றி சிலாகிக்கிறார்!
‘டிரான்: ஏரஸ்’ படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ் பற்றி சிலாகிக்கிறார்!சென்னை 26 செப்டம்பர் 2025: ‘டிரான்: ஏரஸ்’ படத்தில் ஜாரெட் லெட்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் அவரது மறக்க முடியாத பயணமாக ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் இணைந்து பணியாற்றியதை சொல்கிறார். ஆஸ்கார் விருது வென்ற ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக நேரம் செலவழித்ததையும், 1982 ஆம் ஆண்டு கல்ட் கிளாசிக் படத்தில் கெவின் ஃபிளினை திரையில் கொண்டு வந்தது பற்றியும் சிலாகித்து பேசினார்.
பட புரோமோஷனில் பேசிய ஜாரெட், “அவர் என்னுடைய சிறந்த நண்பர். ஜெஃப் அன்பானவர், நகைச்சுவை உணர்வு கொண்டவர், பண்பானவர் என அவரைப்பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் அதற்கு சரியாகப் பொருந்திப் போவார். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் செலவழித்த நேரம் என்றும் மறக்க முடியாது.
அவர் முதல் முறையாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது, எல்லோரும் கைதட்டி வரவேற்றார்கள்” என்றார்.
லெட்டோவைப் பொறுத்தவரை பிரிட்ஜஸ் வெறும் சக நடிகர் மட்டுமல்ல! அவர்தான் டிரானின் ஆன்மா.
அவர் இல்லாமல் டிரான் படத்தைப் பற்றி யோசிப்பது கூட சாத்தியமற்றது என்கிறார் லெட்டோ.
பிரிட்ஜஸ் தனக்கு படப்பிடிப்பு தளத்தில் Air என செல்லப்பெயர் வைத்ததாகவும் மகிழ்வுடன் சொல்கிறார் லெட்டோ. “இத்தனை வருடங்களில் அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். உங்கள் ஹீரோவுடன் சேர்ந்து நீங்கள் நடிப்பது எத்தனை சிறப்பான தருணம்” என்றார்.
மேலும் சிறுவயதில் அவரைப் பார்த்து வியந்தது பற்றியும் கூறுகிறார், “12 வயது சிறுவனாக முதன் முதலில் அந்தப் படம் பார்த்தது என் வாழ்க்கையை மாற்றியது. அந்தப் படத்தின் தொழில்நுட்பம், கிரியேட்டிவிட்டி, ஃபன், அட்வென்ச்சர் எல்லாமே என்னை ஈர்த்தது. முதல் இரண்டு டிரான் படங்களில் அவர் நடிப்பில் மிரட்டியிருப்பார். அவருடன் இணைந்து பணியாற்றியது என் அதிர்ஷ்டம். அவரது வழியில் என்றும் நடக்க முயல்வேன்” என்றார்.
Related posts:
ஜெஃப் பிரிட்ஜின் ரிட்டர்னான ‘டிரான்: ஏரஸ்’ படத்தின் புதிய போஸ்டர் மற்றும் டிரெய்லரை டிஸ்னி வெளியிட்டுள்ளது!
சிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்தில் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”
ட்ரான்: ஆரீஸ்’ புதிய ட்ரெய்லர் வெளியீடு, ஜெஃப் ப்ரிட்ஜஸ் திரும்பியுள்ளார்; இந்தியாவில் அக்டோபர் 10, 2025 அன்று பல மொழிகளில் வெளியாகிறது !
“மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நான் இணை ஹீரோ நடிகர் சரத்குமார்!
கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் நடித்தது பற்றி நடிகை துஷாரா விஜயன்!
ஸ்வீட் காரம் காபி’யின் முக்கியத்துவத்தைப் பற்றி நடிகை மது, தனது பயணத்தைப் பற்றி மனம் திறந்து பேசுகிறார்.!!
பட்லர் பாலு என்ற படத்தில் நான் ஹீரோ இல்லை அதில் துளியும் உண்மை இல்லை. – யோகி பாபு
நிசப்தம் படத்தில் தனது கதாபாத்திரத்துக்காக அனுஷ்கா ஷெட்டி கடினமாக உழைத்துள்ளார். இதற்காக ஓவியம் மற்றும் இரண்டு விதமான சைகை மொழிகளையும் கற்றுக் கொண்டார்.
இந்த மாஸ்டர் படத்துல நான்தான் ஹீரோ. எப்படின்னா நான் விஜய்க்கு வில்லன்னா அவருக்கு எனக்கு வில்லன். அப்படின்னா நான்தான் ஹீரோ. – மக்கள செல்வன் விஜய்சேதுபதி
NETFLIX தனது அடுத்த அதிரடிவெளியீடான சூப்பர் ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி” படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!

