தமிழ் மற்றும் தெலுங்கில் ஆறு ஒரிஜினல் கதைகளை அறிவித்துள்ளது நெட்ஃபிலிக்ஸ்!
தமிழ் மற்றும் தெலுங்கில் ஆறு ஒரிஜினல் கதைகளை அறிவித்துள்ளது நெட்ஃபிலிக்ஸ்!
சென்னை 13 அக்டோபர் 2025 நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் 2014 ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. அதேபோல, நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படமும் இந்தியாவின் டாப் 10 படங்கள் பட்டியலில் 14 வாரங்கள் இடம் பெற்றிருந்தது.

நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கண்டெண்ட் வைஸ் பிரெசிடெண்ட், மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது,
சீட் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் தமிழ் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான ‘ஸ்டீபன்’ படத்தை முதலில் அறிமுகப்படுத்துகிறோம்.
அடுத்து, தெலுங்கு சீரிஸ் ‘சூப்பர் சுப்பு’. நகைச்சுவை ததும்ப உருவாகும் வித்தியாசமான இந்தக் கதையை மாலிக் ராம் இயக்க சந்தீப் கிஷன் நடித்துள்ளார்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், நவீன காதல் குறித்த வித்தியாசமான கோணத்தை வழங்குகிறது ‘காதல்’ என்ற தமிழ் சீரிஸ். எதிர்பாராத வழிகளில் இருவரை நெருக்கமாகக் கொண்டுவரும் தருணத்தில் ஏற்படும் சவால்களை இந்தத் தொடர் பேசுகிறது.
தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய கலாச்சாரக் கதையைக் கொண்டு வருகிறது ‘மேட் இன் கொரியா’. ரா கார்த்திக் இயக்கிய இந்தக் கதையில் ‘ஸ்க்விட் கேம்’ புகழ் பார்க் ஹை-ஜினுடன் பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
வினோத் அனந்தோஜு இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்கு நாட்டுப்புற த்ரில்லர் கதைதான் ‘தக்ஷகுடு’.
இயக்குநர் சாருகேஷ் சேகரின் தமிழ்த் தொடர் ‘லெகஸி’. இதில் ஆர். மாதவன், நிமிஷா சஜயன், கௌதம் கார்த்திக், குல்ஷன் தேவையா மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் நடிக்கின்றனர்.
த்ரில்லர்ஸ், நெகிழ்ச்சியான கதைகள் முதல் அதிரடியான நகைச்சுவைகள் மற்றும் மென்மையான காதல் வரை இந்த மாறுபட்ட ஜானர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் படைப்புத் திறமையைக் காட்டுகிறது.
‘பிளாக் வாரண்ட்’, ‘தூம் தாம்’, ‘டப்பா கார்டெல்’, ‘ஜூவல் தீஃப்’, ‘டெஸ்ட்’, ‘தி ராயல்ஸ்’, ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ மற்றும் சமீபத்திய வெளியீடான ‘தி பேடாஸ் ஆஃப் பாலிவுட்’ என தைரியமான மற்றும் வித்தியாசமான கதை சொல்லலுக்கு புகழ்பெற்ற நெட்ஃபிலிக்ஸ் தற்போது தென்னிந்தியாவின் புது திறமையாளர்களுடன் இணைந்துள்ளது.
இந்த வித்தியாசமான கதைகளை நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் மட்டும் கண்டு மகிழுங்கள்!Related posts:
நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ காதல், பொய் மற்றும் டிஜிட்டல் உலகம் ஆகிய மூன்றின் ஐந்து அடுக்குகளை ஆராய்கிறது !
ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘கியாரா கியாரா’ இந்தியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது!!
தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான சமுத்திரக்கனியின் ராமம்ராகவம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாகிறது !!
ZEE 5 ஒரிஜினல் ‘ஐந்தாம் வேதம்’ தமிழ் மற்றும் தெலுங்கில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது !!
நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், ZEE5 ஒரிஜினல் படமான ‘ஹிசாப் பராபர்’ இப்போது இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகிறது!!
ZEE5 மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது !!
அமேசான் ஒரிஜினல் தொடர் Bandish Bandits இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் அமேசான் பிரைம் வீடியோவில் பார்த்து மகிழுங்கள்.
ஜீ5 பெருமையுடன் வழங்கும் பிளாக்பஸ்டர் உறி – தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தமிழ் மற்றும் தெலுங்கில்
டிஸ்னி ஹாட் ஸ்டார் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் பாராசூட் சீரிஸை கோலாகலமாக அறிவித்துள்ளது!!
வாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம், இரண்டாவது வாய்ப்பு மற்றும் நம்பிக்கையை பற்றின கதைகளை கொண்டு இந்த கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் படமாக்கப்பட்ட ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக வெளிவரவுள்ள அமேசான் ஒரிஜினல் திரைப்படமான புத்தம் புது காலை படத்தை அமேசான் அறிவித்திருக்கிறது.

