‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படம் பிப்ரவரி 13, தேதி அன்று தமிழகமெங்கும் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!
‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படம் பிப்ரவரி 13, தேதி அன்று தமிழகமெங்கும் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.!
சென்னை 08 பிப்ரவரி 2026 இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் நடிகை நளினி கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம், ‘உயிருள்ளவரை உஷா’.
நடிகர்கள் கங்கா, ராதா ரவி, எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, சரிதா உள்பட பலர் நடித்திருந்தனர்.
இந்த ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படம் 1983-ம் ஆண்டு வெளியான திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
திரைப்படத்தில் இடம் பெற்ற இந்திரலோகத்து சுந்தரி, வைகைகரை காற்றே நில்லு, இதயமதை கோவிலென்றேன் உள்பட அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றன.
இந்நிலையில், திரைப்படம் 43 வருடங்களுக்குப் பிறகு 4கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பிப்ரவரி 13-ம் தேதி மீண்டும் வெளிவருகிறது.
இதற்கான வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ராதாரவி, நளினி ஆகியோர் கலந்து கொண்டனர.
விழாவில் டி.ராஜேந்தர் பேசும்போது,
இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஒரிஜினல் காப்பியை பைனான்சியர்களுக்கு போட்டு காண்பித்தேன்.
ஜெமினி லேபில் திரைப்படத்தைப் பார்த்து விட்டு, நளினி, கதாநாயகியாக சரியாக வரமாட்டார்; அவருக்கு ‘நீட்டு முகம்’ என்று அவரை மாற்றச் சொன்னார்கள்.
ஆனால், அவரை கதாநாயகியாக வைத்து திரைப்படம் எடுத்தேன்.
நான்கு ஆயிரம் அடி பிலிம் வாங்கி, நீட்டு முகம் என்ற சொன்னவர்களிடம் அவரை ‘நீட்’ முகமாக மாற்றினேன்.
நடிகை நளினியின் தலைமுடியை விரித்துப் போட வைத்து, பேக் லைட்டில் வைத்து திரைப்படமாக்கினேன்.
அந்த பேக் லைட் தான் என் கதாநாயகியின் ஹைலைட். பிறகு அவர்களுக்கு மீண்டும் திரைப்படம் போட்டுக் காண்பித்தேன்.
திரைப்படத்தைப் பார்த்து விட்டு, நீட்டு முகம் என்று யார் சொன்னார்களோ, அவர்களே அனைவரும் கைதட்டினார்கள்.
இதை என் திறமைக்காகவோ, என் தலைக் கணத்துக்காகவோ சொல்லவில்லை.
வாழ்க்கையில் யார், எப்போது, எப்படி வருவார்கள் என்பது யாருக்கும் தெரியாது, ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்பதற்காகத்தான் சொல்கிறேன்” என கூறினார்.
டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1983-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “உயிருள்ளவரை உஷா” திரைப்படம், நவீன தொழில்நுட்பத்தில் 4K தரத்தில் புதுப்பிக்கப்பட்டு, பிப்ரவரி 13, 2026 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.
நடிகை நளினி அறிமுகமான இப்படத்தை, காதலர் தினத்தை முன்னிட்டு (Lovers Day Special) மீண்டும் வெளியிட டி.ராஜேந்தர் திட்டமிட்டுள்ளார்.











