சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான ‘ரோர் 26’ (Roar 26) நிகழ்ச்சியின் இயக்குனராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளார் பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் !

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான ‘ரோர் 26’ (Roar 26) நிகழ்ச்சியின் இயக்குனராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளார் பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் !

சென்னை 24 மார்ச் 2026 பாணா காத்தாடி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான ‘ரோர் 26’ (Roar 26) நிகழ்ச்சியின் இயக்குனராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மைக் ஹசி மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற ஜாம்பவான்களுடன், தமிழ் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு சிஎஸ்கே அணிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஆர்.ஜே. பாலாஜி, அனிருதா ஸ்ரீகாந்த், அர்ஜுன் தாஸ் மற்றும் ஆர்.கே. (எ) ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொகுப்பாளர்களாக இருந்து நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நடத்தினர்.

சைமா (SIIMA) மற்றும் மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் போன்ற உயர்மட்ட நிகழ்ச்சிகளை இயக்கிய தனது அனுபவத்தைக் கொண்டு, பத்ரி வெங்கடேஷ் ‘ரோர் 26’ நிகழ்வை ஒரு மறக்க முடியாத இரவாக மாற்றினார்.

ஏற்கனவே மூன்று தமிழ்ப் படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

error: Content is protected !!