இந்தியாவின் மிகப்பெரிய காதல் காவியம் “லவ் & வார்”. 2027 ஜனவரி 21 வெளியீடு !!

இந்தியாவின் மிகப்பெரிய காதல் காவியம் “லவ் & வார்”. 2027 ஜனவரி 21 வெளியீடு !!

சென்னை 18 ஏப்ரல் 2026 இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027 குடியரசு தின வார இறுதியை மையமாகக் கொண்டு, உலகம் முழுவதும் 2027 ஜனவரி 21 வியாழக்கிழமை, அன்று வெளியாகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த காதல் திரைப்படத்தில், ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் இணைந்து நடிக்கின்றனர். வலுவான உணர்ச்சிகள் நிரம்பிய ஒரு தீவிரமான காதல் காவியமாக இப்படம் உருவாகியுள்ளது.

பன்சாலியின் தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் ஆழமான கதை சொல்லும் முறைப்படி, இந்த படம் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய காட்சி அனுபவத்தையும், ஆழமான உணர்ச்சியையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்டமான அளவில் உருவாகும் “லவ் & வார்”, சஞ்சய் லீலா பன்சாலியின் மிகபெரும் கனவுப்படைப்பாக உருவாகி வரும், பிரம்மாண்டமான காதல் படைப்பாகும்.

கதை அமைப்பும், தீவிரமான உணர்வுகளும், இதை இந்தியாவின் மிகப்பெரிய காதல் காவியங்களில் ஒன்றாகவும், இந்திய சினிமாவின் மிகப்பெரிய காதல் காட்சி அனுபவங்களில் ஒன்றாகவும் நிலைநிறுத்துகிறது.

“லவ் & வார்” படம், தமிழ் ,இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தியாவெங்கும் பிரம்மாண்டமாக வரும் 2027 ஜனவரி 21 அன்று வெளியாகவுள்ளது.

CLOSE
CLOSE
error: Content is protected !!