’பேட்டில்’ (Battle) திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- அர்ஜுன் பிரபாகரன்,  ஆராத்யா, சுப்ரமணியம் சிவா, முனிஷ்காந்த், சரவண சுப்பையா, உரியடி சுருளி, காயத்ரி, ராஜலட்சுமி, மெம்மோ, திவிய தர்ஷினி,தீஹன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- நாராயணன் பழனி.

ஒளிப்பதிவாளர் :- யுவராஜ் ஆர்.

படத்தொகுப்பாளர் :- காமேஷ் கே.

இசையமைப்பாளர் :- ஜீவா.

தயாரிப்பு நிறுவனம் :- எலைட் டாக்கீஸ்.

தயாரிப்பாளர் :- K. பாஸ்கரன்.

மக்கள் தொடர்பு :-  நிகில் முருகன்.

ரேட்டிங் :-  2.5./5.

மிகப்பெரிய அளவில் ராப் பாடகாராக சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வரும் கதாநாயகன் அர்ஜுன் பிரபாகரன் தனியார் பள்ளியில் ஆசிரியை பணியில் இருக்கும் கதாநாயகி ஆராத்யாவும் இருவரும் ஒருவருக்கொருவர்  காதலிக்கிறார்கள்.

கதாநாயகன் அர்ஜுன் பிரபாகரனின் பலநாள் கனவு ராப் பாடகாராக சாதிக்க வேண்டும் லட்சியம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு கிடைக்க, அதை சரியான அளவில்  பயன்படுத்தி மிகப்பெரிய ராப் பாடகராக  உருவாகிவிடுகிறார்.

கதாநாயகன் அர்ஜுன் பிரபாகரனின் ராப் பாடகாராக சாதிக்க வேண்டும்  கனவை நினைவாக்கிய, அவர்கள் மூலம் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைக்கிறது. 

இந்த நிலையில், கதாநாயகி ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் நடக்கும் மிகப்பெரிய மோசடியால்  மாணவ மாணவிகள் மற்றும், ஆசிரியர்களும் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

கதாநாயகி ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் நடக்கும் மோசடியை கதாநாயகன் அர்ஜுன் பிரபாகரன் வைத்து ராப் பாடல் மூலம் உலகிற்கு இந்த மோசடியை தெரியப்படுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற கதாநாயகி ஆராத்யாவின் விருப்பத்தை கதாநாயகன் அர்ஜுன் பிரபாகரன் ராப் பாடல் மூலம் நிறைற்ற முடிவு செய்கிறார்.

ஆனால், கதாநாயகன் அர்ஜுன் பிரபாகரன்  பள்ளியில் நடக்கும் இந்த மோசடியை ராப் பாடல் மூலம் தடுக்கும் முயற்சி கதாநாயகன் அர்ஜுன் பிரபாகரன் வளர்ச்சியை பாதிக்கும் என நினைக்கும் இசை நிறுவனம் முயற்சிக்கு  முட்டுக்கட்டை போடுவதோடு, கதாநாயகன் அர்ஜுன் பிரபாகரனை மிரட்டவும் செய்கிறார்கள்.

ஒரு பக்கம் கதாநாயகன் அர்ஜுன் பிரபாகரனை அந்த இசை நிறுவனம் பொருத்திக் கொண்டிருக்கிறது.

மறுபக்கம் தனியார் பள்ளி தலைவர் வில்லன் சுப்பிரமணிய சிவா, கதாநாயகி ஆராத்யாவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.

இநத இசை நிறுவனத்துடன் இருந்து கதாநாயகன் அர்ஜுன் பிரபாகரன் பிரச்சினையை சமாளித்தாரா? சமாளிக்கவில்லையா?

தனியார் பள்ளி தலைவர் வில்லன் சுப்பிரமணிய சிவாவிடம் கதாநாயகி ஆராத்யா உயிர்  தப்பித்தாரா?  தப்பிக்கவில்லையா?

கதாநாயகன் அர்ஜுன் பிரபாகரன் கதாநாயகி ஆராதயா பிரச்சனைகளிலிருந்து தப்பித்து இந்த காதல் ஜோடி  ஒன்று  சேர்த்தார்களா? ஒன்று சேரவில்லையா?  என்பதுதான் இந்த ’பேட்டில்’ (Battle)  திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ’பேட்டில்’ (Battle)  திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக அர்ஜுன் பிரபாகரன், நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அர்ஜுன் பிரபாகரன், கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருந்தாலும் நடிப்பில் இன்னும் பயிற்சி தேவை ராப் பாடல் பாடும் போது, தனது நடிப்பு மற்றும் உடல் மொழியில் வெளிப்படுத்த தவறிவிட்டார்.

இந்த ’பேட்டில்’ (Battle)  திரைப்படத்தில் கதாநாயகியாக ஆராதயா நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஆரத்யா, அழகு வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, வழக்கம் போல் தனது கதாபாத்திரத்திற்கு சிறப்பு  சேர்த்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரவண சுப்பையா, அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முனிஷ்காந்த், இசை நிறுவனத்தின் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுருளி, காயத்ரி என உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்கள் வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் யுவராஜ்.ஆர், ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜீவா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில்  ராப் பாடல்களும், அதன் சூழல்களும் தான் கதைக்களம் என்றாலும், இசையில் பார்வையாளர்களை கவரக்கூடிய அம்சங்கள் மிக மிக குறைவாகவே  கொடுத்திருக்கிறார்.

கதைக்களம் மற்றும் ராப் , கலைஞர்களாலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வும் பிரசாரம்,  ஆகியவை பாராட்டும்படி இருந்தாலும், அதை ஒரு சுவாரஸ்யம் மிக்க திரைப்படமாக கொடுக்க தவறியிருக்கிறார் இயக்குநர்  நாராயணன்.பழனி.

மொத்தத்தில், ‘பேட்டில்’ (Battle) கல்வி மற்றும் கலையை வைத்து சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வு திரைப்படம்.

error: Content is protected !!