தயாரிப்பாளர் பி.எல். தேனப்பனை நேரில் அழைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் !!
தயாரிப்பாளர் பி.எல். தேனப்பனை நேரில் அழைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் !!
சென்னை 29 ஏப்ரல் 2026 சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் – 2 திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
மேலும், ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தலைவர் 173வது திரைப்படம் கைவிடப்பட்டதாக
அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் ‘படையப்பா’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாகவும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி படையப்பா திரைப்படம் ரீ-ரிலிஸ் ஆனது. ரீ ரிலிசிலும் இந்த திரைப்படம் சொத்தை கோடு போட்டு மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது.
25 ஆண்டுகளை கடந்தும் திரையரங்குகளில் படையப்பா திரைப்படத்தை சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனால், மகிழ்ச்சி அடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அப்போதே படையப்பா திரைப்படத்தின் இயக்குனர், நடிகை ரம்யா கிருஷ்ணன், தயாரிப்பாளர் பி.எல.தேனப்பன் உள்ளிட்டோரை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.
இந்தநிலையில், படையப்பா திரைப்பட தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் அவர்களை நேரில் அழைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐந்து சவரன் தங்க சங்கிலியை பரிசளித்தார்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், நடிகைகள் சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் படையப்பா.
1999-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.











