மறைந்த தயாரிப்பாளர் திரு. ஆர். பி. சௌத்ரி அவர்களுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இரங்கல் செய்தி.!
மறைந்த தயாரிப்பாளர் திரு. ஆர். பி. சௌத்ரி அவர்களுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இரங்கல் செய்தி.!
சென்னை 06 மே 2026 தென்னிந்திய தமிழ்த் திரைப்படத் துறையில் தயாரிப்பாளர்களின் சிகரமாக திகழ்ந்தவர்.
சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு சரணாலயமாய் இருநதவர்…
தயாரிப்பாளர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்து பெருமை சேர்த்தவர்..,
தமிழ்த் திரையுலகின் பல முன்ணணி இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர்…
தமிழ் சினிமாவின் புதிய முயற்சிகளுக்கு என்றும் உறுதுணையாக இருந்த துணிச்சல்காரர்…
புதிய கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள், பல தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர்…
சினிமாத்துறையில் உள்ள அனைவரிடத்திலும் எளிமையாக பழகி பேசக்கூடிய மனிதர்.,
முதல் படமான புது வசந்தம் தொடங்கி 99வது படமான மகுடம் வரை சிறப்பான கதைகளை தேர்வு செய்து தயாரித்த ஆகச்சிறந்த தயாரிப்பாளர்.,
.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல்வேறு கால கட்டங்களில் நிர்வாகியாக பதவி வகித்து சினிமாவின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவர்.,
அப்பேற்பட்ட ஆகச்சிறந்த மனிதர், தயாரிப்பாளர்களின் சிகரம் என்று திரையுலகில் போற்றப்பட்ட திரு.ஆர்.பி.சௌத்ரி அவர்கள் அகால மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி தென்னிந்திய திரைப்படத் துறைக்கு மிகவும் பேரதிர்ச்சியாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.












