‘EXAM’ எக்ஸாம் இனையத்தொடர் விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- துஷாரா விஜயன், அதிதி பாலன், வசுந்தரா, அப்பாஸ், சூர்யா, சரவணா சக்தி, நரேன் மணி, சூரியா ஜெயா, அக்‌ஷதா அஜித், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஏ.சற்குணம்.

ஒளிப்பதிவாளர் :- அருண்  அமரேந்திரன்.

படத்தொகுப்பாளர் :- ரிச்சர்ட் கெவின். ஏ.

இசையமைப்பாளர் :- சாம் சி எஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- வால்வாட்சர் பிலிம்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- புஷ்கர்  காயத்ரி, கௌதம் செல்வராஜ், எஸ் குஹப்ரியா, எஸ் நந்தகுமார்.

மக்கள் தொடர்பு :-  யுவராஜ்.

ரேட்டிங் :-  3.5./5.

சென்னையில் இருந்து பணி மாற்றலாகி தைகாராவிற்கு வரும் துணை காவல் கண்காணிப்பாளரான (DSP) அதிதி பாலனை (மரமத்தி) காரில் வரும் வழியில் கதாநாயகி துஷாரா  விஜயன், (ஜான்சி )கடத்தி விடுகிறார்.

துணை காவல் கண்காணிப்பாளரான (DSP) அதிதி பாலனுக்கு (மரமல்லி) பதிலாக ஆள் மாறாட்டம் செய்து கதாநாயகி துஷாரா  விஜயன், (ஜான்சி) தைகாராவில் உள்ள காவல் நிலையத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளரான (DSP) பதவியில் பணியில் சேர்கிறார்.

பிராந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (RPSC) நடக்கும் ஊழல்களைக் கண்டுபிடிக்க கதாநாயகி துஷாரா  விஜயன், (ஜான்சி) மெனக்கெடுகிறார்.

துணை காவல் கண்காணிப்பாளரான (DSP) அதிதி பாலனுக்கு (மரமல்லி) பதிலாக ஆள் மாறாட்டம் செய்து கதாநாயகி துஷாரா  விஜயன், (ஜான்சி) எதற்காக
தைகாராவில் உள்ள காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளரான (DSP) பதவியில் சேர்கிறார்.

பிராந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (RPSC) நடக்கும் ஊழல்களைக் கண்டுபிடிக்க எதற்காக கதாநாயகி துஷாரா  விஜயன், போராடுகிறார்.

பிராந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (RPSC) நடக்கும் ஊழலை கதாநாயகி துஷாரா  விஜயன், (ஜான்சி), கண்டுபிடித்தாரா?, கண்டுபிடிக்கவில்லையா?,
என்பதுதான் என்பதுதான் இந்த ‘EXAM’ எக்ஸாம் இனையத்தொடரின் மீதிக்கதை.

இந்த ‘EXAM’ எக்ஸாம், இனையத்தொடரில் கதையின் நாயகியாக துஷாரா  விஜயன்,  நடித்திருக்கிறார்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் துஷாரா  விஜயன், துணை காவல் கண்காணிப்பாளராக (DSP) மிகவும் தைரியமாக ஆள் மாறாட்டம் செய்து ஜான்சி கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

மிகவும் தைரியமாக ஆள் மாறாட்டம் செய்து ஜான்சி கதாபாத்திரத்தை உடலளவிலும் மனதளவிலும் தயார்ப்படுத்தும் ஜெயசந்திரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்பாஸ் மிகவும் அருமையாக நடித்துள்ளார்.

இந்த ‘EXAM’ எக்ஸாம், இனையத்தொடரில் மற்றொரு கதையின் நாயகியாக அதிதி பாலன் நடித்துள்ளார்.

மரமல்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிதி பாலன் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நரேன் மணி, மற்றும் அவருடைய இளம் வயது  வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூரிய ஜெயா மிகவும் அருமையாக  நடித்துள்ளனர்.

சரண்யா  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வசுந்தரா  நடித்துள்ளார்.

இளம்வயது சரண்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அக்‌ஷதா அஜித், அந்த கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமான தேர்வு.

டிதுணை காவல் கண்காணிப்பாளரான (DSP) ஜீப் ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரவண சக்தி அந்த கதாபாத்திரத்திற்கு மிக சிறப்பாக  பொருந்தி இருப்பது போல் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த எக்ஸாம் இணைய தொடரில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அருண்  அமரேந்திரன் ஒளிப்பதிவு மூலம் இணையத்தொடருக்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

காருக்குள் அதிதி பாலனுக்கும், துஷாரா விஜயனுக்கும் இடையே நடக்கும் சண்டையை  ஒளிப்பதிவாளர் அருண் அமரேந்திரன் மிகவும் சிறப்பான காட்சிப்படுத்தி இருக்கிறார்

இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இணையத் தொடர் மிரட்டி இருக்கிறார்.

ஏழு அத்தியாயங்கள் கொண்ட இந்த இனையத்தொடரை எழுதி இயக்கியுள்ள  இயக்குநர் A.சற்குணம் என்பதை நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாக உள்ள நிலையில் அவரது வழக்கமான பாணியில் இருந்து விலகி, இப்படிப்பட்ட கதையை சிறப்பான திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பது மிகவும் ஆச்சரியமான இருக்கிறது.

பல விதமான கனவுகளோடு அரசு பணியாளர் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு, இந்த சிஸ்டம் இழைத்த மிகப் பெரிய துரோகத்தை இத்தொடர்  தோலுரித்துக் காட்டி  சிறப்பான கதையை மிக சிறப்பாக திரைக்கதை அமைத்து அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.சற்குணம்.

மொத்தத்தில் இந்த EXAM எக்ஸாம் இணைய தொடர் ரசிகர்கள் மனதில் பாஸ்மார்க் வாங்கி விட்டது.

error: Content is protected !!