‘WARRANT’ ’வாரண்ட்’ இணையத் தொடர் விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- பிரசாந்த் பாண்டியராஜ், பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள் தாஸ், நம்ரிதா எம்வி, அருள் ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா, வையாபுரி. மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- விக்னேஷ் நடராஜன்.
ஒளிப்பதிவாளர் :- அசோக் குமார்.
படத்தொகுப்பாளர் :- ஆர்.ராமர்.
இசையமைப்பாளர் :- சாம் சி.எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- சிவன் பிக்சர்ஸ், எஸ் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர்கள் :- பிரசாந்த் பாண்டியராஜ், பி விஷால், பி எம் ஆதிஸ்வர்.
மக்கள் தொடர்பு :- சதீஷ் (S2 மீடியா).
ரேட்டிங் :- 4.25./5.
நடிகர் விமல் கதையின் நாயகனாக நடித்த ‘விலங்கு’ இணையத் தொடர் மூலம் திரையில் சொல்லப்படாத காவல்துறை உலகத்தின் ஒரு பகுதியை உண்மைக்கு நெருக்கமாகவும், இயல்புத்தன்மை மாறாமல் சொல்லி ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இந்த வாரண்ட் இனையத்தொடரில் கதையாசிரியர் மற்றும் கதையின் நாயகனாக அதே காவல்துறையின் மற்றொரு பக்கத்தை உண்மைக்கு நெருக்கமாக சொல்லி வியக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் நடராஜன்.
திருச்சி பொன்மலையில் தலைமை ஆசிரியராக பணி புரியும் வரும் தந்தை பாலாஜி சக்திவேல் மற்றும் தாயுடன் கதாநாயகன் பிரசாந்த் பாண்டியராஜ், வசித்து வருகிறார்.
தந்தை பாலாஜி சக்திவேல் தனது ஒரே மகன் கதாநாயகன் பிரசாந்த் பாண்டியராஜ், அரசு வேலையில் தான் சேர வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு வேலைகளுக்கும் பதிவு செய்து தேர்வு எழுதிக் கொண்டு எழுதிய அனைத்து தேர்வுகளிலும் ஒரு சில மார்க்குகளால் தேர்ச்சி பெறாமல் தனது தந்தையின் ஆசைக்காக எப்படியாவது அரசு வேலையில் சேர்வதற்காக அனைத்து அரசு தேர்வுகளையும் எழுதும் கதாநாயகன் பிரசாந்த் பாண்டியராஜ், கடைசியாக தனது மாமன் காளி வெங்கட்டின் வற்புறுத்தலால் காவல்துறையில் காவலர் வேலைக்கு தேர்வு எழுதி காவல்துறையில் காவலர் வேலைக்கு தேர்ச்சி பெறுகிறார்.
கதாநாயகன் பிரசாந்த் பாண்டியராஜ், மாமா காளி வெங்கட் எஸ் பி அலுவலகத்தில் டிரைவராக வேலையில் இருப்பதால் அவரது செல்வாக்கை பயன்படுத்தி அதை ஊரில் உள்ள பொன்மலை கோட்டை காவல் நிலையத்தில் காவலர் வேலையை வாங்கி தருகிறார்.
காவல்துறை கட்டமைப்பை கடக்க முடியாமல் திணறுவதோடு, அங்கிருக்கும் ஈகோ உள்ளிட்ட பல எதிர்மறை விசயங்களால் பாதிக்கப்பட்டு, மற்றவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி அவமானப்படுகிறார்.
வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலே எதிர்பாராதவிதமாக விசாரணைக்கு வந்த கைதியை சிறைக்குள் வைத்து கதாநாயகன் பிரசாந்த் பாண்டியராஜ், அடித்ததால் சிறையில் அந்த விசாரணைக்கைதி இறந்து விடுகிறார்.
சிறையில் விசாரணை கைதி இறந்ததால் ஜெயபிரகாஷ் தலைமையினால சிறப்பு குழு ஒன்று இந்த சிறையில் இறந்த போன விசாரணைக் கைதியின் கொலையை பற்றி விசாரிக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் காவல்துறை வேலை வேண்டாம் என்ற முடிவு எடுக்கும் கதாநாயகன் பிரசாந்த் பாண்டியராஜ், தன் தந்தை பாலாஜி சக்திவேல் அறிவுரைகளை கூறி மீண்டும் காவல்துறை பணியில் ஈடுபடுகிறார்.
தன்னை அலட்சியமாக பார்த்து அவமானப்படுத்தும்
அனைவருக்கும் தான் யார்? என்பதை நிரூபிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கும் நிலையில் கதாநாயகன் பிரசாந்த் பாண்டியராஜ், அதற்காக மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகள் அவருக்கு மிகப்பெரிய அளவில் சிக்கலை உண்டாக்குகிறது.
அந்த மிகப்பெரிய சிக்கல் என்ன ? இந்த மிகப்பெரிய சிக்கலில் இருந்து கதாநாயகன் பிரசாந்த் பாண்டியராஜ், மீண்டு வந்தாரா!, மீண்டு வரவில்லையா?, என்பதுதான் இந்த ‘வாரண்ட்’ இனையத் தொடரின் மீதிக்கதை.
இந்த வாரண்ட் இனையத்தொடரில் கதையின் நாயகனாக இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ், நடித்திருக்கிறார்.
மிகங அப்பாவியான முகம், அமுல் பேபி’ என்று அழைக்கும் அளவுக்கு அமைதியான சுபாவம் கொண்ட மிகவும் வெகுளியான இளைஞர் கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக பொறுந்தியிருக்கும் கதாநாயகன் பிரசாந்த் பாண்டியராஜ், தன் நிலையை மாற்றுவதற்காக எடுக்கும் அதிரடி முடிவும் அவதாரமும் மூலம் சிறப்பான நடிப்பை கொடுத்து ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார்.
கோட்டை கருப்பசாமி என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
கதாநாயகன் பிரசாந்த் பாண்டியராஜ், யார் ? என்பதை நிரூபிப்பதற்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளும், அதில் வெளிப்படுத்தும் நடிப்பு மூலம் இனையத்தொடர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
இந்த வாரண்ட் இனையத்தொடரில் கதையின் நாயகிகளாக நர்மிதா.எம்.வி, அருள்ஜோதி, சாயா தேவி நடித்துள்ளார்கள்.
கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் நர்மிதா.எம்.வி, அருள்ஜோதி, சாயா தேவி ஆகியோருக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், திரைக்கதை ஓட்டத்திற்கு மிகவும் சிறப்பாக பயணித்திருக்கிறார்கள்.
கதையின் நாயகிகளாக பயணித்திருக்கும் சாயா தேவியின் கதாபாத்திரமும், அவர் கடந்து செல்லும் சூழ்நிலைகளும் மிகவும் சுவாரஸ்யம் மிக்கதாக அமைத்து இருக்கிறது.
கதாநாயகன் பிரசாந்த் பாண்டியராஜின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் கெளசல்யா, காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்தாஸ், காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹெலோ கந்தசாமி, கொடைக்கானல் சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், காவலர்கள் அனைத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக அமைத்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் ஒளிப்பதிவு மூலம் , ஒரு காவல் நிலையத்திற்குள் பயணிக்கும் அனுபவத்தை இனையத்தொடர் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம்.சி.என் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து, ஒவ்வொரு பாகங்களுக்கும் மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.
அதே சமயம், அத்தனை பாகங்களிலும் ஆபாச வார்த்தைகளின் ஆதிக்கம் அதிக அளவில் காட்சிகளில் நிறைந்து இருப்பது சற்று நெருடலாக இருக்கிறது.
தற்போது ஓடிடி தளங்களில் வரும் இனையத் தொடர்களுக்கு தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதது இதுபோன்ற ஆபாச வார்த்தைகள் எளிதாக்கி விடுவதால், வேறு வழியில்லை என்று தான் பார்வையாளர்கள் கடந்து போக வேண்டியுள்ளது.
இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இருவரின் கதை மற்றும் திரைக்கதை திரையில் சொல்லப்படாத காவல்துறை பணியின் பின்னணியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.
காவல் துறையினர் சிறை மரணம் என்ற ஒரு சம்பவத்தை மட்டுமே வைத்துக் கொண்டு சுமார் நான்கரை மணி நேரம் இனையத்தொடர் பார்வையாளர்களின் முழு கவனத்தையும் ஈர்த்துவிடும் அளவிற்கு இயக்கியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் நடராஜன்,
காவல்துறையில் பணிபுரியும் சில அதிகார திமிர் படைத்த காவல்துறை அதிகாரிகளால் அப்பாவி பொது மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள், என்பதையும் மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.
அனைத்து பாகங்களும் சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருப்பதோடு, உணர்வுப்பூர்வமாகவும் காட்சிகளை வடிவமைத்து மிக அருமையாகவும் இந்த “வாரண்ட்” இனையத்தொடரை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் நடராஜன்.
மொத்தத்தில், ‘வாரண்ட்’ இனையத்தொடர் ரசிகர்கள் அனைவருக்கும்
கண்டிப்பாக பிடிக்கும்.






