‘காட்டாளன்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், கபீர் சிங், சுனில், சித்திக், பர்த் திவாரி, ராஜ் திரன்தாசு, ஹரிஷங்கர் நாராயணன், ஆன்சன் பால்,   சந்தீப், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பவுல் ஜார்ஜ்.

ஒளிப்பதிவாளர் :- ரேனா திவே.

படத்தொகுப்பாளர் :- ஷமீர் முகம்மது.

இசையமைப்பாளர் :- ரவி பஸ்ரூர்.

தயாரிப்பு நிறுவனம் :- கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ்.

தயாரிப்பாளர் :- ஷெரீப் முகம்மது.

மக்கள் தொடர்பு :- நிகில் முருகன்.

ரேட்டிங் :-  3.5./5.

சிறு வயது முதல் காட்டில் சட்ட விரோதமாக யானைகளை கொன்று அதனுடைய தந்தங்களை எடுத்து இலங்கைக்கு கடத்தல் ஒரு கொடூரமான கடத்தல் மன்னன் வில்லன் சுனில் தன்னை எதிர்ப்பவர்கள் தான் செய்யும் கடத்தலில் லாபத்தில் பங்கு கேட்பவர்களையும் இரக்கமில்லாமல் கொன்று குவிக்கும் அரக்க குணம் படைத்தவன்.

யானைகளைப் பிடித்து கொன்று அதனுடைய தந்தங்களை வெட்டி எடுத்து கொடுக்கும் 40க்கு மேற்பட்ட வேட்டைக்காரர்களை வில்லன் சுனில் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அடிமைகளைப் போல நடத்திக் கொண்டிருக்கிறார்.

தங்களை அடிமை போல் நடக்கும் வில்லன் சுனில்  செய்யும் அனைத்து கொடுமைகளுக்கு பயந்து சுனிலை நேரம் பார்த்து காலி செய்வதற்கு சில வேட்டைக்காரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது ஒரு புறம் இருக்க வில்லன் சுனில் எதிரி கொஸ்டியான எடி கேங் யானை தந்தத்தை கடத்தும் கடத்தல் சாம்ராஜ்யத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள்.

இந்த சூழலில் தான் ஒற்றை ஆளாக எதற்கும் அஞ்சாத கதாநாயகன் ஆண்ட்னி வர்கீஸ் மாஸாக என்று கொடுக்கிறார்.

வில்லன் சுனிலுக்கு பல கடத்தல் திட்டங்களுக்கு கதாநாயகன் ஆண்டனி வர்கீஸ் பக்க பலமாக நிற்கிறார்.

வில்லன் சுனில் இடமிருந்து அடிமைத்தனமாக இருக்கும் வேட்டைக்காரர்களின் குடும்பங்கள் தப்பிக்க நினைக்கும் வில்லன் சுனிலை எப்படியாவது விழுத்த வேண்டுமென கதாநாயகன் ஆன்டனி வர்கீஸ்  உதவியை நாடுகிறார்கள்.

வில்லன் சுனிலிடம்  அடிமைத்தனமாக இருக்கும் வேட்டைக்காரர்கள்  கதாநாயகன் ஆண்டனி வர்கீஸ் மூலம் வில்லன் சுனிலை வீழ்த்தினார்களா? வீழ்த்தவில்லையா?, என்பதுதான் இந்த ‘காட்டாளன்’  திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘காட்டாளன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஆண்டனி வர்கீஸ் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸ் திரைப்படத்தில் வசனங்கள் குறைவு என்றாலும் செயல் அதிகம் என்ற பாணி ஆக்சன் காட்சிகளில் அதிரடி காண்பித்திருக்கிறார்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இடைவேளை காட்சிகளில் இறந்த உடல்களில் யானை தந்தங்களை மறைத்து கடத்தும் காட்சியின் போது காவல்துறையினர் சுற்றி வளைக்கும் போது  திருப்பம் திரைப்படத்திற்கு மிகவும் சுவாரசியத்தை  கூட்டுகிறது.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுனில் வில்லத்தனத்தில் அதிரடி காண்பித்திருக்கிறார்.

யானை தந்தம் கடத்தும் தலைவன் கதாபாத்திரம் நடிகர் சுனிலுக்கு அல்வா சாப்பிடுவது  போன்ற கதாபாத்திரம் தான் ஆங்காங்கே புஷ்பா திரைப்படத்தில், பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் சித்திக் கதிர் சிங், பரத் திவாரி, ராஜ் தீரன்தாஸ், ஆன்லைன் பால், ஹரி ஷங்கர் நாராயணன், சந்திப், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே  அனைவரும் மிக சிறப்பாக  நடித்திருக்கிறார்கள்.

மேலும் உரிய அனுமதியோடு துன்புறுத்தப்படாமல் பெப்ஸி மற்றும் எக்செல், ஆகிய இரண்டு யானைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் வலம் வருகிறது.

படத்தொகுப்பாளர் ஷமீர் முகம்மது படத்தொகுப்பு மூலம் திரைப்படத்தில் விறுவிறுப்பை கூட்ட முயற்சி செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரேனா திவே ஒளிப்பதிவு மூலம் இந்தக் காட்டில் உள்ள அழகையும் ஆபத்தையும் மிகத் தெளிவாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் :- ரவி பஸ்ரூர் பின்னணி இசையில் திரைப்படம் முழுவதும் மாஸ்  காண்பித்திருக்கிறார்.

இடைவேளை முன் காட்சிகளில் இறந்தவர்கள் உடலில் தந்தங்களை கடத்தும் காட்சி, காவல்துறை வந்ததும் வரும் டுவிஸ்ட் என கொஞ்சம் சுவாரஸ்யம் ஆனால், இந்த சுவாரஸ்யம் திரைப்படம் முதல் பாதி முழுவதுமே இருந்திருக்கலாம்,

இதனால் முதல் பாதி எதுவுமே பெரிய சுவாரஸ்யம் இல்லை.

திரைப்படத்தின் இரண்டாம் பாதி பெரிய திருப்பம் மற்றும் சுவாரஸ்யம் இருக்கும் என எதிர் பார்த்தால் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து  எடுத்துள்ளார்கள்,

காடுகளில் இருக்கும்  யானைகளின்  தந்தத்தை கடத்தும் கடத்தல் மற்றும் அதன் பின்னனியை கருவாக எடுத்துக் கொண்டு
அதில் உள்ள உண்மைகளை பற்றியும்,  காட்டில் வாழும் வேட்டைக்காரர்கள் அவர் குடும்ப உறுப்பினர்களை  பற்றியும் மிகவும் அழுத்தமாக பேசாமல், ஆக்‌ஷன் காட்சிகளையும், கதாபாத்திரங்களை  இந்த போன காட்சிகளை வைத்து  திரைப்படமாக்கியிருப்பது திரைப்படத்திற்கு  எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

மொத்தத்தில், இந்த காட்டாளன் திரைப்படம் வேட்டையாடியது காட்டில் உள்ள யானைகள் மட்டுமில்லை, நாட்டில் உள்ள திரைப்பட  பார்வையாளர்களையும் தான்.

error: Content is protected !!