‘சம்ஹாரம்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- பிரஜின் பத்மநாபன்,  ஷர்மிஷா, நியா வர்கீஸ், கணேஷ் சாவரட்டில், ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ராம் பிரபா.

ஒளிப்பதிவாளர் :- சுரேஷ் குமார் சுந்தரம்.

படத்தொகுப்பாளர் :- ராம்நாத்.

இசையமைப்பாளர் :- வி.ஜி ஹரி கிருஷ்ணன்.

தயாரிப்பு நிறுவனம் :- வித்யா புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- ஏ வேல்முருகன்.

மக்கள் தொடர்பு :- சரண்.

ரேட்டிங் :-  2./5.

பங்களாக்குள், ஒரே இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து திரைக்கதையில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் இந்த திரைப்படம் தொடக்கத்தில் சாதாரணமான குடும்ப  பிரச்சனைகளுடன்   ஆரம்பிக்கும் காட்சிகள், கொஞ்சம் கொஞ்சமாக மர்மம், பதற்றம் திரில்லர் சஸ்பென்ஸ்
என எதிர்பாராத திருப்பங்களால்  திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்து விட்டார்கள்.

கதாநாயகன் பிரஜின் தனது தங்கையின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, தன்னுடைய மாமா பையனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.

விடிந்தால் மறுநாள் காலையில் ரிஜிஸ்டர் ஆபீஸ் கட்டாயக் திருமணம் நடை பெறவிருக்கும் தருவாயில், கதாநாயகன் பிரஜினின் தங்கை ஷர்மிஷா, தன்னுடைய காதலனுடன் தப்பிச்செல்ல முடிவு செய்கிறார்.

கதாநாயகன் பிரஜினின் தங்கை ஷர்மிஷா திட்டமிட்டபடி, தன்னுடைய காதலன் இரவு நேரத்தில் கதாநாயகன் பிரஜினின் வீட்டிற்குள் நுழைந்து ஷர்மிஷாவை அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார்.

அந்த நேரத்தில், கதாநாயகன் பிரஜனின் நண்பர் மூலமாக கார் ரிப்பேர் ஆனதாகக் கூறி தந்தையும் மகளும் கதாநாயகன் பிரஜனின் வீட்டில் இரவு தங்குகின்றனர்.

அதே நேரத்தில்  மற்றொரு முகமூடி அணிந்த மர்ம உருவமும் வீட்டிற்குள் நுழைகிறது.

அதன் பிறகு சில மர்மமான விஷயங்கள் நடக்க கதாநாயகன் பிரஜனின் வீட்டிற்குள் யார் யார் இருக்கிறார்கள்?

முகமூடி அணிந்த மர்ம நபர் யார்?

அவர்கள் அனைவரும் கதாநாயகன் பிரஜனின் வீட்டிற்குள்  வந்ததற்கான  நோக்கம் என்ன?

கதாநாயகன் பிரஜனின் தங்கை ஷர்மிஷா காதலனை கரம் பிடித்தாரா?,  கரண்ட் பிடிக்கவில்லையா?, என்பதுதான், இந்த “சம்ஹாரம்” திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த “சம்ஹாரம்” திரைப்படத்தில் பிரஜன்  முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முதன்மை கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் பிரஜின் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான அளவில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

முதன்மை கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் பிரஜின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷருமிஷா கதையின் மையமாக மாறி தனது உணர்ச்சிப்பூர்வமான காதல், பயம், தவிப்பு என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் கவனம் ஈர்க்கிறார்.

வில்லனாக வரும் கணேஷ் சாவரட்டில் கதைக்கு தேவையான அச்சத்தை உருவாக்கி மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா  கதாபாத்திரங்களில்  பங்களிப்பும் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகவும் உதவுகிறது.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் குமார் சுந்தரம் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் வி.ஜி ஹரி கிருஷ்ணன் பின்னணி இசையில் தாறுமாறாக வாசித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் காதை கிழித்து விட்டார்.

இந்த “சம்ஹாரம்” திரைப்படத்தில் குறைந்த கதாபாத்திரங்களையும், ஒரே பங்களாவில் நடக்கும் சம்பவங்களை பயன்படுத்தி மிக சுவாரஸ்யமான திரைக்கதையை  அமைத்து சிறப்பாக இயக்கி இருக்கிறார்   இயக்குநர் ராம் பிரபா.

மொத்தத்தில், இந்த “சம்ஹாரம்” திரைப்படம் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக  அமைந்திருக்கும்.

error: Content is protected !!