நடிகை சுகன்யா 30 ஆண்டுகள் போராடி ஜெயித்த சன் டிவி ரூபாய் 10 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற உத்தரவு !
நடிகை சுகன்யா 30 ஆண்டுகள் போராடி ஜெயித்த சன் டிவி ரூபாய் 10 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற உத்தரவு !
சென்னை 08 ஜூன் 2026:தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை சுகன்யா 1990 காலக் கட்டங்களில் தன்னுடைய தனி தத்துவமான நடிப்பால் ரசிகர்களால் பாராட்டப்பட்டவர்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் நடிகை சுகன்யா கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
அதன் பின் நடிகர் விஜயகாந்த் ஜோடியாக சின்ன கவுண்டர், கமலஹாசன் உடன் மகாநதி, இந்தியன், சத்யராஜுடன் திருமதி பழனிச்சாமி வால்டர் வெற்றிவேல், என்ன இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை தேடித்தந்தது.
மிகவும் இயல்பான நடிப்பு மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்கள் மூலம் தனது திறமையை நிரூபித்து முன்னணி நடிகையாக திரைப்பட உலகில் மட்டுமல்லாமல் நடிகை சுகன்யா சின்னத்திரையிலும் கால் பதித்து வெற்றிகரமாய் வலம் வந்தார்.
தமிழ் திரைப்பட உலகில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்திய திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருந்தார்.
தற்போது இவர் பெரிய அளவில் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடிப்பதில்லை.
பல திரைப்படங்களில் நடிகைகளுக்கு பின்னணி குரல்ளும் கொடுத்திருக்கிறார்.
இவர் பரதநாட்டிய கலைஞர்கள் கூட கலைமாமணி விருது பெற்று இருக்கிறார்.
பிரபல சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி 1996 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் சந்தன கடத்தல் வீரப்பன் சந்தித்து எடுத்த பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஒளிபரப்பு செய்யப்பட்ட பேட்டியில் முன்னாள் பிரதமர் பி.வ. நரசிம்மராவின் மகனுடன் நடிகை சுகன்யா அவர்களுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தன கடத்தல் வீரப்பன் அந்த பேட்டியில் பேசியிருந்தார்.
அது முற்றிலும் பொய்யான தகவல் என அவதூறு குற்றச்சாட்டு என நடிகை சுகன்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
திரைப்பட உலகில் தனது நற்பெயரை எடுத்த இந்த பேத்தியால் தனது திரைப்பட வாய்ப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில் மன உளைச்சலும் ஏற்பட்டது.
இந்த போட்டியை ஒளிபரப்பு செய்த சன் டிவி மீது 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என வழக்கில் நடிகை சுகன்யா கேட்டுக்கொண்டார்.
நடிகை சுகன்யா போடப்பட்ட வழக்கை ஏற்று சிவில் நீதிமன்றம் 10 லட்சத்து ஐநூறு ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என
உத்தரவிட்டது.
அந்த தீர்ப்பை எதிர்த்து சன் டிவி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நக்கீரன் கொடுத்த பேட்டியை அப்படியே ஒளிபரப்பினோம், அவர் பேசியதற்கு நாங்கள் பொறுப்பல்ல என சன் டிவி வாதிட்டது.
ஆனால் அந்த பேட்டியை எடிட் செய்யும் முழு அதிகாரம் சன் டிவிக்கு இருக்கிறது என நக்கீரன் உடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருக்கிறது. எடிட் செய்ய முழு அதிகாரம் வைத்து இருந்தும், அதை ஒளிபரப்பும் முன் விசாரிக்கவோ, நடிகை சுகன்யாவிடம் இருந்து இது பற்றி விளக்கம் கேட்கவோ இல்லை. அதனால் ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு நாங்கள் பொறுப்பல்ல என சன் டிவி தப்பிக்க முடியாது என கூறிய நீதிபதி, கீழ் நீதிமன்றம் விதித்த 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அவதூறான பகுதியை மீண்டும் ஒளிபரப்ப கூடாது என நிரந்தர தடையும் தொடரும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.











