‘ஹபீபி’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- கஸ்தூரி ராஜா, ஈஷா, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ, அனுஸ்ரெயா ராஜன், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள் குமார், ரேகா குமணன், ரபியா, இஸ்மத் பானு, பைரோஜா, மலர் கைசென், சன் ஷாகுல், மாஸ்டர் தீஹான், தீக்ஷா ஸ்ரீ மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மீரா கதிரவன்.

ஒளிப்பதிவாளர் :- மகேஷ் முத்துசுவாமி.

படத்தொகுப்பாளர் :- ராஜா முகமது.

இசையமைப்பாளர் :- சாம். சி.எஸ‌

தயாரிப்பு நிறுவனம் :- நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- ஷாஹுல் ஹமீத், கோவை இப்ராஹிம் வி. குணசேகரன் வி.கருப்புச்சாமி, வி.சங்கர்

மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா (D ONE)

ரேட்டிங் :-  4./5.

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் இன்று 12 ஜூன்  2026 வெளிவந்துள்ள ‘ஹபீபி’ திரைப்படம், தமிழ் திரைப்பட உலகில் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் பெரிதாகப் பேசப்படாத இஸ்லாமிய சமூகத்தின் யதார்த்த வாழ்வியலையும், தற்சார்பு கொண்ட பெண்ணின் காதலையும் உணர்வுப்பூர்வமாகப்  சொல்லும் ஒரு நேர்த்தியான சிறந்த  படைப்பாகும்.

1980-களின் திருநெல்வேலி மாவட்ட கடையநல்லூர் கிராமத்தில் உள்ள நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு இஸ்லாமியக் குடும்பங்களின் பின்னணியில் வாழ்க்கை, அவர்களின் உறவுகள், கனவுகள், போராட்டங்கள் மற்றும் காதலை மையமாக ஒரு எதார்த்தமான காதல் கதையாக இந்த ‘ஹபீபி’ திரைப்படம் உருவாகியுள்ளது.

1980-களின் திருநெல்வேலி மாவட்ட கடையநல்லூர் கிராமத்தில் உள்ள நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு இஸ்லாமியக் குடும்பங்களின் கஸ்தூரி ராஜா மனைவி மற்றும் குழந்தைகளுடன் இனைத்து தம்பி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட கஸ்தூரி ராஜா விசைத்தறி இயந்திரங்கள் வந்த காரணத்தால் நெசவுத் தொழில் பாதிப்படைந்த காரணத்தால் கஸ்தூரி ராஜாவின் தம்பி வெளிநாட்டுக்கு பயணப்படுகிறார்.

கஸ்தூரி ராஜாவின் மகன் கதாநாயகன் ஈஷா கதாநாயகி மாளவிகா மனோஜை காதலித்துக் கொண்டு நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும் ஈஷா சூழ்நிலை காரணமாக வேலைக்காக வெளிநாடுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

கஸ்தூரி ராஜாவின்  குடும்பம் வசதி வாய்ப்புகள் பெருகிக்கொண்டு வெளிநாட்டில் இருந்து வந்த கதாநாயகன் ஈஷா திருமணம் ஏற்பாடு செய்கிறார்கள்.

கதாநாயகன் ஈஷாவின் திருமணம் ஒரு சில சிக்கல் மற்றும் குடும்ப பிரச்சினைகளால் திருமணம் நின்று விடுகிறது.

இந்த நிலையில் ஈஷாவிற்கு திருமணம் நடந்ததா? திருமணம் நடக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘ஹபீபி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ​கஸ்தூரி ராஜா தனது அனுபவமிக்க நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

இஸ்லாமியக் குடும்பத்தின் தலைவனாக, பொறுப்பான தந்தையாக, நெசவுத்தொழில் பாதிப்படைந்த சூழ்நிலையில் நொறுங்கும் மனிதனாக அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் அனைத்தும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை நெகிழ வைக்கிறார்.

இந்த ‘ஹபீபி’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஈஷா நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஈஷா, இளமைக்கே உரிய காதல், துடிப்பு மற்றும் உணர்ச்சிகளை மிகவும் சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ‘ஹபீபி’ திரைப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மனோஜ் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக  நடித்திருக்கும் மாளவிகா மனோஜ் கதைக்கு தேவையான அழகையும், உணர்வுகளையும் மிகவும் அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார்

இந்த திரைப்படத்தில் மற்ற  கதாபாத்திரங்களும் நடித்திருக்கும் தனஸ்ரீ, அனுஸ்ரெயா ராஜன், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள் குமார், ரேகா குமணன், ரபியா, இஸ்மத் பானு, பைரோஜா,மலர் கைசென், சன் ஷாகுல், மாஸ்டர் தீஹான், தீக்ஷா ஸ்ரீ துணை கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் கதையோடு ஒன்றிப்போய் நடித்திருப்பது திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, ஒளிப்பதிவு மூலம் திரையில் வரைந்திருக்கும் சித்திரங்கள் காலத்துக்கும் பேசப்படக்கூடியவை என்றாலும் ஒவ்வொரு காட்சியையும் அவர் வடிவமைத்திருக்கும் விதம் திரைப்படத்திற்கு ஒரு காவியத்தன்மையுடன் காட்சிப் படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் இஸ்லாமிய மக்கள் வாழ்வியலுக்கு வளம் சேர்த்திருக்கிறார்.

தமிழ்த்திரையுலகில் மட்டுமின்றி இந்தியத் திரையுலகிலேயும் இஸ்லாமியர்கள் என்றால் வன்முறையாளர்கள்,பயங்கரவாதிகள்,மணிதநேயமற்றவர்கள் என்பது போன்ற சித்தரிப்புகள்தாம் 99.99 விழுக்காடு உள்ளது.

இஸ்லாமிய வாழ்வியலை எடுத்துச் சொல்லிவிடவேண்டும் என்கிற தவிப்பில் இயங்கியிருக்கிறார் இயக்குநர் மீராகதிரவன்

மொத்தத்தில், இந்த ‘ஹபீபி’ நல்ல படைப்புகளை இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படைப்பு.

error: Content is protected !!