‘டார்க் ஜென்ட்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- சோனியா அகர்வால், லிவிங்ஸ்டன், பாக்யராஜ்,
அயலி மதன், அமுதவாணன் ஜோவிடா லிவிங்ஸ்டன், விஜய், ரஃபிக் பாட்சா, ஆதர்ஷ் மதிகாந்த், கே கீர்த்தி,
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கே.எஸ். கிஷன்.
ஒளிப்பதிவாளர் :- சங்கீத் மணி கோபால்.
படத்தொகுப்பாளர் :- ஜி.ஜே. திருசெல்வம்.
இசையமைப்பாளர் :- விக்னேஷ் ராஜா.
தயாரிப்பு நிறுவனம் :- பயோவன் கிரியேஷனிசம்.
தயாரிப்பாளர் :- லோகேஸ்வரன் என்.
மக்கள் தொடர்பு :- எம்.பி. ஆனந்த்.
ரேட்டிங் :- 2.5./5.
கதாநாயகன் ஆதர்ஷ் மதிகாந்த், தன்னுடைய மனைவி ஜோவிடா லிவிங்ஸ்டன்,மற்றும் தங்கை கீர்த்தி சென்னையில் வசித்து வருகிறார்.
கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் கதாநாயகன் ஆதர்ஷ் மதிகாந்தை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஒருவர், கோவை மாவட்டத்தில் உள்ள தாதா இருக்கிறார் கிராமத்தில் உங்களது பூர்வீக சொத்துக்களை, தனது பேரன், பேத்திக்கு அனைத்து சொத்துகளையும் கொடுக்க வேண்டும் என விரும்புவதாக அந்த தொலைபேசியில் பேசிய நபர் கூறுகிறார்.
தன்னுடைய பூர்வீக சொத்து கிடைத்தால் தனது அனைத்து கடன் பிரச்சனைகளையும் தீர்ந்துவிடும் என்ற எண்ணத்தில், தன்னுடைய மனைவி ஜோவிடா லிவிங்ஸ்டன்,மற்றும் தங்கை கீர்த்தி அழைத்துக் கொண்டு அந்த கிராமத்துக்கு செல்லும் கதாநாயகன் ஆதர்ஷ் மதிகாந்த், சொத்துக்காக உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருக்கும் தனது தாத்தா இருக்கும் வீட்டில் சில நாட்கள் தங்குவதற்கு முடிவு செய்கிறார்கள்.
இந்த நிலையில் கதாநாயகன் ஆதர்ஷ் மதிகாந்த், மனைவி ஜோவிடாலிவிங்ஸ்டன், மற்றும் தங்கை கீர்த்தி தங்கியிருந்த அந்த வீட்டில் சில பயங்கரமான அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க, அவர்களை முத்துக்கள் இருக்கிறது என்று கூறி கிராமத்திற்கு வரவைத்த அந்த நபர் மற்றும் படுத்த படுக்கையாக இருக்கும் தாத்தாவும், 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர் என்ற உண்மை தெரிய வருகிறது.
கதாநாயகன் ஆதர்ஷ் மதிகாந்த், தன்னுடைய மனைவி ஜோவிடா லிவிங்ஸ்டன்,மற்றும் தங்கை கீர்த்தி இவர்களை கிராமத்திற்கு வரவழைப்பதற்கான பின்னணி என்ன?
அந்த வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் என்ன?, கதாநாயகன் ஆதர்ஷ் மதிகாந்த், முத்துக்கள் அனைத்தும் கிடைத்ததா? கிடைக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘டார்க் ஜியண்ட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
தொடர்ந்து திகில் மற்றும் வித்தியாசமான அமானுஷ்ய கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஆதர்ஷ் மதிகாந்த், இந்த முறையும் சுவாரஸ்யமான ஒரு திகில் கதையில் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளார். அவரது தலைமுடி அலங்கோலமாக இருந்தாலும், கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பது, சாத்தான் தன் உடலில் புகுந்த பிறகு தன்நிலை மறந்து நடப்பது, பிறகு தன்நிலை அறிந்து கலங்குவது, என்று பல உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.
இந்த ‘டார்க் ஜியண்ட்’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஆதர்ஷ் மதிகாந்த், நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ் மதிகாந்த், மிக அருமையாக படிப்பை கொடுத்து இருக்கிறார்.
அவருடைய தோற்றம் அழகாக இருந்தாலும் அவருக்கு போடப்பட்ட ஒப்பனை தலையில் உள்ள விக் மிக மிக மட்டமாக உள்ளது.
கதாநாயகனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோவிதா லிவிங்ஸ்டன், குடும்பபாங்கான கதாபாத்திரத்திற்கு மிகவும் பொறுத்தமான தேர்வாக இருக்கிறார்.
அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் அழகாக பயமும், பதற்றமும் கலந்த நடிப்பால் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
இந்த திரைப்படத்தின் கதையின் கருவாக நடித்திருக்கும் அருவி மதன் மற்றும் சோனியா அகர்வால், குறைவான காட்சிகள் வந்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் வகையில் நடித்துள்ளார்கள்.
கதாநாயகனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீர்த்தி கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.
கதாநாயகனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமுதவாணன், காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரபிக் பாட்ஷா, சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபால் திகில் காட்சிகளை அச்சமூட்டும் வகையில் மிகவும் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி ரசிகர்கள் நெஞ்சை படபடக்க வைக்கிறார்.
இசையமைப்பாளர் விக்னேஷ் ராஜாவின் இசையில் பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் பயத்தையும் படபடத்தையும் ஏற்படுத்துகிறது.
ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்கள் திகில் கதைக்களத்தை சரியான முறையில் சிறப்பான திரைக்கதை மூலம் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார் என்றாலும் அதை மிகவும் அச்சத்துடன் பார்க்க வைத்து பல காட்சிகளில் சீட் நுணியில் அமர வைத்து விடுகிறார் இயக்குனர் கே.எஸ்.கிஷான்.
மொத்தத்தில், ‘டார்க் ஜெயண்ட்’ திரைப்படம் திகிலடைய வைக்கிறது.



