‘என்ன விலை ‘ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- கருணாஸ், நிமிஷா சஜயன், ஒய்​.ஜி. மகேந்​திரா, பூர்​ணிமா பாக்​ய​ராஜ், விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மோகன் ராமன், கவிதாலயா கிருஷ்ணன், தீபா சங்கர், லொள்ளு சபா சுவாமிநாதன், ஷாஷா, சிவகுமார், சேத்தன் சீனு, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சஜீவ் பழூர்.

ஒளிப்பதிவாளர் :- அல்பி ஆண்டனி.

படத்தொகுப்பாளர் :- ஸ்ரீஜித் சாரங்.

இசையமைப்பாளர் :- சாம் சி.எஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- கலாமயா பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- கிதேஷ் வி.

மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா ( D ONE)

வெளியீட்டு தேதி :- 17 செப்டம்பர்  2026.

ரேட்டிங் :-  3.5./5.

ராமேஸ்வரம் கடற்கரையில் இறந்தவர்களின் அஸ்தியை கரைக்க வரும் மற்றும் திதி கொடுக்க வருபவர்கள் பக்தர்கள் காணிக்கையாக வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் சென்று சேகரித்தும் கதாநாயகன் கருணாஸ் தனது வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் கதாநாயகன் கருணாஸ் கடலுக்கு அடியில் சில்லறை காசுகளை எடுக்கச் சொல்லும்போது ஒரு மர்மமான பழமையான தங்க ஆபரணம்  ஒன்று அவருடைய கையில் கிடைக்கிறது.

கடலுக்கு அடியில் சில்லறை காசுகளை எடுக்கச் சொல்லும்போது கடலுக்கு அடியில் கிடைத்த மர்மமான பழமையான தங்க ஆபரணம்  கதாநாயகன் கருணாஸ் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.

கடலுக்கு அடியில் கிடைத்த மர்மமான பழமையான தங்க ஆபரணம் அரசாங்கத்திற்கு சொந்தம் என்ற நல்லெண்ணத்துடன் அந்த பழமையான தங்க ஆபரணத்தை காவல்துறையினரிடம் கதாநாயகன் கருணாஸ்  அந்த ஆவணத்தை ஒப்படைக்கிறார்

கதாநாயகன் கருணாஸ் கடலுக்கு அடியில் கிடைத்த அந்த  பழமையான தங்க ஆபரணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைக்க எதிர்பாராத விதமாக திருட்டு பழிக்க ஆளாகிறார்.

கதாநாயகன் கருணாஸ் மீது சுமத்தப்படும் பொய் வழக்குகள், அதிகார வர்க்கத்தின் அழுத்தம் மற்றும் குடும்பத்தைக் காக்க வழக்கறிஞர் நிமிஷா சஜயன்  கதாநாயகன் கருணாஸ் மீது சுமத்தப்பட்ட பழியிலிருந்து காப்பாற்றுவதற்காக சட்டப் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா?

அதன் பின்னர் திருட்டுப் பழிக்கு ஆளான கதாநாயகன் கருணாஸ்  திருட்டுப் பழியில் இருந்து விடுபட்டாரா? விடுபடவில்லையா? என்பதுதான் இந்த ‘என்ன விலை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘என்ன விலை’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக கருணாஸ் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கருணாஸ் இதுவரை நாம் பார்த்திராத கருணாஸை இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார்.

தன்னுடைய குடும்பத்தின் மீது  பாசம் உள்ள கணவனாகவும், தனது பிள்ளைகளின் மீது அன்பு கொண்ட தந்தையாகவும், எந்த ஒரு தவறும் செய்யாமல்  குற்றவாளியாக்கப்பட்டபோது மனதளவில் உடைந்து போகும் மனிதராகவும் அவர் மிக இயல்பான நடிப்பை அருமையாக கொடுத்திருக்கிறார்.

வழக்கறிஞராக நடித்திருக்கும் நிமிஷா சஜயன் சிறப்பான நடிப்பை மிக அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

வழக்கறிஞராக காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிமிஷா சஜயன், அந்தக் கதாபாத்திரத்தை நடித்திருக்கிறார் என்று கூறுவதை விட கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் ஒய்​.ஜி. மகேந்​திரா, பூர்​ணிமா பாக்​ய​ராஜ், விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மோகன் ராமன், கவிதாலயா கிருஷ்ணன், தீபா சங்கர், லொள்ளு சபா சுவாமிநாதன், ஷாஷா, சிவகுமார், சேத்தன் சீனு அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அல்பி ஆண்டனி ஒளிப்பதிவு மூலம் இயற்கை வெளிச்சம் & யதார்த்தம்: ராமேஸ்வரத்தின் உப்புக்காற்று, சுட்டெரிக்கும் வெயில் மற்றும் விரிந்த கடல் பரப்பை செயற்கைத்தனம் இல்லாமல் இயற்கை வெளிச்சத்திலேயே அசல் அழகோடு பதிவு செய்துள்ளார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை: எளிய மனிதனின் இயலாமை மற்றும் சட்டப் போராட்டத்தின் தீவிரத்தை தனது அழுத்தமான ‘Score’ மூலம் உணர்வுப்பூர்வமாக கொடுத்திருக்கிறார்.

ராமேஸ்வரத்தில் கடலில் மூழ்கி நாணயம் எடுக்கும் எளிய மனிதனுக்குக் கிடைக்கும் ஒரு பொருள், அவனை அதிகார வர்க்கத்தின் சதிவலை மற்றும் பொய் வழக்குகளில் சிக்க வைக்கும் எதார்த்தமான சமூகப் போராட்டம்தான் கதைக்களம் என்றாலும் விறுவிறுப்பான திரைக்கதை: எளிய மனிதனின் இயலாமை, வர்க்க முரண் மற்றும் நீதிமன்ற வாதங்களை தேவையற்ற சினிமாத்தனங்கள் இன்றி நேரடியான, அழுத்தமான திருப்பங்களுடன் இயக்கியிருக்கிறார் இயக்குனர் சஜீவ் பழூர்.

மொத்தத்தில் இந்த ‘என்ன விலை’ திரைப்படம் அதிகாரத்தின் சதியை எதிர்க்கும் எளிய மனிதனின் சமரசமற்ற நீதிப் போராட்டம்; சுயமரியாதைக்கு சமூகம் கேட்கும் விலையை உடைத்துக்காட்டும் யதார்த்த படைப்பு!

error: Content is protected !!