நடிகர் சமுத்திரக்கனியின் ‘அடுத்த சாட்டை’ திரைபடத்தை வெளியிடுவதில் சிக்கல் !?

அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, அதுல்யா ரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அடுத்த சாட்டை’. இந்த படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை லிப்ரா தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியது. இந்நிலையில் லிப்ரா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாங்கள் கொடுத்த 50 லட்சம் ரூபாய் தவிர எங்களுக்கும் ‘அடுத்தசாட்டை’ திரைப்படத்திற்கும் இனி வேற எந்த தொடர்பும் இல்லை , அதை அவர்கள் நியாயப்படி திருப்பி தருவார்கள் என்ற நேர்மையை லிப்ரா புரொடக்சன்ஸ் எதிர்பார்க்கிறோம்” என பதிவிட்டுள்ளார். இதனால் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

error: Content is protected !!