முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு ஜாமின் மறுப்பு.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் ⛓கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில், அமலாக்கத்துறையும் அவர் மீது விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணையில் ஜாமின் தரக்கூடாது என்று சிபிஐ தரப்பு வாதிட்டிருந்தது. இந்நிலையில், ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

CLOSE
CLOSE
error: Content is protected !!